states

img

பாஜக எங்களுக்கு எதிர்க்கட்சிதான்: நவீன் பட்நாயக்

ஒடிசாவை ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய  ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்றாலும், பிரச்சனைகளின் அடிப்படையில் ஒன்றிய அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், பாஜக வும், பிஜூ ஜனதாதளமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு புவனேஸ்வரில் நடந்த கலந்துரை யாடல் நிகழ்ச்சி ஒன்றில் பிஜூ ஜனதாதளம் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக் பதிலளித்துள்ளார். அதில், “பாஜக எங்களுக்கு எதிர்க்கட்சிதான்” என்று கூறியுள்ளார். “எனினும் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களில் ஒன்றிய  அரசிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கிறது. அத்துடன் பிரதமர் மோடி யுடன் இணக்கமான உறவு உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.