பொருளாதார நெருக்கடி, அணியில் போதுமான அனுபவ வீரர்கள் இல்லாமை, ஆலோ சனை அளிக்க சீனியர் வீரர்கள் கூட இல்லாமல் கடினமான சூழ்நிலையில் களமிறங்கிய இலங்கை அணி யாரும் எதிர்பாராத வகையில் ஆசியக் கோப்பை தொடரை கைப்பற்றி வர லாறு படைத்தது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடி, இயல்பு நிலை போன்றவற் றால் நிம்மதியை இழந்து நிற்கும் இலங்கை மக்களுக்கு செவ்வாயன்று ஒரு புதிய சந்தோசம், மிகப்பெரிய பர வசத்தை ஏற்படுத்தியது. அந்த சந்தோசம் யாதெனில் ஆசியக் கோப்பையுடன் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நகர்வலம் வந்தது தான். கோப்பையுடன் தங்கள் நாட்டு வீரர்கள் வலம் வருவதை கண்ட மக்கள் ஆரவா ரத்துடன் கைத்தட்டி வரவேற்றனர். ஜெட் வேகத்தில் விற்கும் பெட்ரோல் விலையை கூட பொருட்படுத்தாமல் சிலர் தங்களது இருசக்கர வாகனங் களில் இலங்கை வீரர்களின் நகர்வ லத்துக்கு ஆதரவாக பின்தொடர்ந்து சென்று ஆச்சர்யப்படுத்தினர். பொருளாதார நெருக்கடியால் நாட்டில் என்ன நடக்கிறது? அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பதை அறிய முடியாமல் ஒவ்வொரு நாளும் பதற்றத்தில் வாழ்ந்து கொண்டிரு க்கும் இலங்கை மக்களுக்கு ஆசி யக்கோப்பை மூலம் இலங்கை கிரிக்கெட் அணியினர் ஒரு தற்காலிக சந்தோசத்தை பரிசாக வழங்கி ஆறுதல் செயலை செய்துள்ளனர்.