states

img

‘டிஜிட்டல் மீடியா’க்களை கட்டுப்படுத்த சட்டம்

புதுதில்லி, நவ. 25 - “டிஜிட்டல் மீடியா செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் வகையில், விரைவில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது” என ஒன்றிய அரசின் செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். “அச்சு,  மின்னணு மற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் சுயமாக கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வதையே ஒன்றிய அரசு விரும்புகிறது. இருப்பினும் நாட்டின் நலன், ஊடகங் களின் நலன், அதில் பணிபுரிவோரின் நலனுக்காக சில கட்டுப்பாடுகள் தேவை. இதுகுறித்து ஒன்றிய அரசு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்” என்று அவர் ஜெய்ப்பூரில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.