states

img

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நார் பாய் ஆலையை மூட வேண்டும்

ஈரோடு, ஜன.21 - கொடுமுடி அருகே நிலம், நீர், காற்றை மாசுபடுத்தும் கொங்கு காயர்  ஆலையை மூடக் கோரி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர் சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், இச்சிபாளையம் ஊராட்சியில்  7 ஏக்கர் பரப்பளவில் கொங்கு காயர்  நார்மில் தொழிற்சாலை 4 ஆண்டு களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த ஆலையில் சாயம் கலந்த நார் பாய் உற்பத்தி செய்வது குறித்து மக்க ளுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஊராட்சி மன்றத்திலும், ஆலையை நிறுவுவதற்கு முறையான அனுமதி தரப்படவில்லை. மாசு கட்டுப்பாடு வாரியம், பசுமை தீர்ப்பாயம், நிலத்தடி  நீர் பகுப்பாயம் போன்ற அரசு நிறுவ னங்களில் எவ்வித அனுமதியும் பெற வில்லை.  இந்நிலையில், இரண்டு ஆண்டு களுக்கு முன்பு சாயம் கலந்த நார் பாய்  உற்பத்தி செய்து, சரக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லும் போது மக்கள்  லாரியை மறித்து போராட்டம் நடத்தினர்.  அப்போது வட்டாட்சியர், வட்டார  வளர்ச்சி அலுவலர், காவல்துறை அதி காரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், “ஆலையை திறக்க மாவட்ட நிர்வாகம் எவ்வித அனுமதியும் தரவில்லை” என்று அரசுத் தரப்பில் தெரிவித்தனர். எனவே முறையான அனுமதி பெறா மல் ஆலை இயக்கப்படாது என்று அப்போது ஆலை நிர்வாகம் தரப்பில்  எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப் பட்டது.  இந்நிலையில், இதனை மீறி ஆலையை இயக்க நிர்வாகம் முயன்ற தைக் கண்டித்து கடந்த டிச.17 அன்று  கொடுமுடி வட்டாட்சியர் அலுவல கத்தில் அரசு ஆவணங்களை ஒப்ப டைக்கும் போராட்டம் நடைபெற்றது.  அப்போது நடத்திய பேச்சுவார்த்தை யில், ‘ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வட்டாட்சியர் உறுதியளித்தார். இதற்கிடையில் இந்த ஆலையின் அடாவடி செயல்பாடுகளை தடுக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இச்சூழலில் அதிகார பலம்,  அரசியல் செல்வாக்கு கொண்ட கொங்கு காயர் ஆலை நிர்வாகம் தொ டர்ந்து ஆலையை நடத்திட முயற்சித்து வருகிறது. ஆகவே சட்டவிரோதமாக ஆலை இயக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி, இச்சிபாளையம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் காத்திருக்கும் போ ராட்டம் நடைபெற்றது.  இப்போராட்டத்திற்கு சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் க.சண்முக வள்ளி தலைமை வகித்தார். சட்டமன்ற  முன்னாள் உறுப்பினரும், சங்கத்தின்  அகில இந்திய துணைத் தலைவரு மான ஏ.லாசர் போராட்டத்தைத் தொ டங்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் அ.பழநிசாமி, மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராக வன், வட்டத் தலைவர் அமிர்தலிங்கம், செயலாளர் கே.பி.கனகவேல், இச்சி பாளையம் தலைவர் மாதப்பன் ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் 500-க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலை யில், கொடுமுடி காவல்துறை ஆய்வாளர்  சரவணன் தலைமையிலான காவல் துறையினர், 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்ட பத்தில் அடைத்தனர்.