இந்திய மாணவர் சங்க தலைவராக ஆதர்ஷ் எம்.சாஜி; பொதுச் செயலாளராக ஸ்ரீஜன் பட்டாச்சார்யா தேர்வு
பாலஸ்தீன ஒற்றுமை நகர் (கோழிக்கோடு) கேரள மாநிலம் கோழிக் கோட்டில் சீத்தாராம் யெச்சூரி மற்றும் நேபாள் தேவ் பட்டாச்சார்யா நகரில் நடை பெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் 18ஆவது அகில இந்திய மாநாட்டில் ஆதர்ஷ் எம்.சாஜி அகில இந்திய தலைவராகவும், ஸ்ரீஜன் பட்டாச்சார் யா பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து ஜி.அர விந்தசாமி, டி.சம்சீர் அகமது, சி. மிருதுளா, கே.வி.சவுமியா, புதுச் சேரியில் இருந்து பிரவீன் குமார் உட்பட 87 பேர் கொண்ட மத்தியக் குழு தேர்ந்தெ டுக்கப்பட்டனர். தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதர்ஷ் எம்.சாஜி கொல்லம் சாத்தனூரைச் சேர்ந்தவர். அவர் எஸ்எப்ஐ கேரள மாநில துணைத் தலை வராகவும், அகில இந்திய இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். தில்லியில் உள்ள ஜன்ஹித் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு எல். எல்.பி. மாணவர் ஆவார். பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்ட ஸ்ரீஜன் பட்டாச்சார்யா மேற்கு வங்காளத்தின் ஜாதவ்பூரைச் சேர்ந்தவர். இவர் வரலாறு முதுக லைப் பட்டதாரி மாணவராவார்.