states

img

புதிய நாடாளுமன்றம் திறப்பு

புதுதில்லி, மே 28- புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா நாடாளுமன்ற வளா கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. முதலில், கணபதி ஹோமம் நடத்தப் பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகி யோர் கலந்து கொண்டனர். இதை யடுத்து, நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் நிகழ்வு நடை பெற்றது.  விழா மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்ட செங்கோலுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. 20 ஆதீனங்கள் செங் கோலை பிரதமர் நரேந்திர மோடி யிடம் வழங்கினர். பிரதமர், செங் கோலை சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் நிறுவினார். அப்போது சபா நாயகர் ஓம் பிர்லாவும் உடனிருந்தார். பின்னர், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இவ்விழா வில் ஒன்றிய அமைச்சர்கள், மாநில  முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்ற னர். குடியரசுத் தலைவரை புறக் கணித்ததை கண்டித்து காங்கிரஸ், சிபிஎம், திமுக உள்ளிட்ட 20 எதிர்க் கட்சிகள் விழாவை புறக்கணித்தன.

சாவர்க்கருக்கு மரியாதை

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் வைக்கப்பட்டி ருந்த சாவர்க்கர் புகைப்படத்திற்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செய் தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலரும் சாவர்க்கருக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் குடியரசு துணைத் தலை வர் ஜெகதீஷ் தங்காரின் உரையை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசித்தார். அதில், ‘‘இந்த நாள் முக்கியமான மைல் கல்லாகும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். நிகழ்வில் பேசிய சபாநாயகர், ‘‘இந்தியாவின் அந்தஸ்து உலக அரங்கில் உயர்ந்துள்ளது’’ என்றார். பிரதமர், சபாநாயகர், மாநிலங்கள வை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோர் இணைந்து புதிய அஞ்சல் தலையை வெளியிட்டனர். பின்னர், புதிய 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோதி வெளியிட்டார். பின்னர் பிரதமர் மோடி பேசுகை யில், ‘‘இந்த அவையில் அலுவல்கள் தொடங்கும் போதெல்லாம் செங்கோல் நமக்கு உத்வேகம் தரும்  என்றும் நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை வருங்காலத்தில் அதிகரிப்பதை காணவிருக்கிறோம். ஆகவே, புதிய நாடாளுமன்றத்தை நிர் மாணிப்பது காலத்தின் தேவையாக இருந்தது’’ என்றும் தெரிவித்தார்.

அதிகாரமளிக்கும் தொட்டில்

நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்டதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்ட அவர், ‘‘நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் திறக்கப்படுவதால், நமது இதயங்களும் மனங்களும் பெருமை, நம்பிக்கை மற்றும் வாக்குறுதியால் நிரம்பியுள்ளன. நாடாளுமன்றக் கட்டி டம் எனும் இந்த சின்னம், அதிகார மளிக்கும் தொட்டிலாக இருக்கட்டும்; கனவுகளை காணச் செய்து அவற்றை நனவாக்கட்டும். இது நமது மகத்தான தேசத்தை முன்னேற்றத்தின் புதிய  உயரங்களுக்கு கொண்டு செல்ல ட்டும்’’ என தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகள் கைது

இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி தில்லி ஜந்தர் மந்தரில் வாரக்கணக்கில் போராட்டத்தை தொடரும் மல்யுத்த  வீராங்கனைகள் புதிய நாடாளு மன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர்.  ஆனால், அவர்களை ஜந்தர் மந்தரிலேயே பாதுகாப்புப் படையினர்  தடுத்து கைது செய்தனர். பாது காப்புப் படையினரை மீறி ஜந்தர் மந்தர்  போராட்டக் களத்தில் இருந்து மல்யுத்த  வீரர், வீராங்கனைகள் வெளியேற முற்பட்ட போது இரு  தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


 

;