states

4.12 லட்சம் சாலை விபத்துகளில் 1.53 லட்சம் பேர் பலி

புதுதில்லி, டிச.29- நாடு முழுவதும் கடந்த 2021- ஆம் ஆண்டில் நிகழ்ந்  துள்ள 4 லட்சத்து 12 ஆயி ரத்து 432 சாலை விபத்துக ளில் 1 லட்சத்து 53 ஆயிரத்து  972 பேர் பலியாகி உள்ளனர்.  இதுகுறித்து ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்  றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் “இந்தியாவின் சாலை விபத்துகள் -2021”  என்ற தலைப்பில் வெளியிட்  டுள்ள அறிக்கையில், நாட்  டில் 2021- ஆம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,53,972 பேர் பலியாகி உள்ள னர் மற்றும் 3,84,448 பேர் காய மடைந்துள்ளனர் எனத் தெரி வித்துள்ளது.  2019 ஆம் ஆண்டோடு ஒப்பிட்டால் 2021- ஆம் ஆண்  டில் சாலை விபத்துக்கள் 8.1 சதவீதமாகவும், காயங்கள் 14.8 சதவீதமாகவும் குறைந்  துள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கை முறையே 16.9 சதவீதம் மற்  றும் 10.39 சதவீதம் அதிகரித்  துள்ளது. 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021ஆம் ஆண்டில் சாலை விபத்து களின் எண்ணிக்கை சராசரி யாக 12.6 சதவீதம் அதிகரித்  துள்ளது. புள்ளிவிவரங்களின் படி, சராசரியாக, நாட்டில் சராசரி யாக 1,130 விபத்துக்கள்  நிகழ்கின்றன. 422 பேர் இறக்கின்றனர். ஒரு மணி நேரத்தில்  47 விபத்துக்கள் நிகழ்கின்றன. 18 பேர் உயிரி ழக்கின்றனர்.

அறிக்கையின்படி, 2020-ஆம் ஆண்டில், நாட்டில் நிகழ்ந்  துள்ள சாலை விபத்துக்கள், இறப்புகள் மற்றும் காயங் கள் முன்னெப்போதும் இல்  லாத அளவிற்கு குறைந்துள்ளன.  இதற்கு நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவல் அதிகரித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். 2021- ஆம் ஆண்டு, நாட்  டில் பதிவான 4,12,432 விபத்  துக்களில், 1,28,825 (31.2 சத வீதம்) தேசிய நெடுஞ்சாலை களில்-விரைவுச் சாலை களிலும், 96,382 (23.4 சத வீதம்) மாநில நெடுஞ்சாலை களிலும்  மற்றும் மீதமுள் ளவை மற்ற சாலைகளில் 1,87,225 (45.4 சதவீதம்)நிகழ்ந்துள்ளன. 2021 ஆம் ஆண்டில் பதி வான மொத்த 1,42,163 விபத்துகளில், 50,953 (35.8 சதவீதம்) தேசிய நெடுஞ் சாலைகளிலும், 34,946 (24.6  சதவீதம்) மாநில நெடுஞ்  சாலைகளிலும், 56,264 (39.6 சதவீதம்) மற்ற சாலைகளி லும் நடந்துள்ளன. மாநிலங்களைப் பொறுத்தமட்டில், 2021- ஆம்  ஆண்டில் தேசிய நெடுஞ் சாலைகளில் அதிக எண் ணிக்கையிலான சாலை விபத்துகளை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது. சாலை விபத்துகளில் இறந்தவர் களின் எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசம் முதலிடத் தில் உள்ளது.