states

இருமல் மருந்து குடித்த 66 குழந்தைகள் பலி

காம்பியா, அக்.6- தென்னாப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமலை குணப்படுத்தும் மருந்துகளைக் குடித்த 66 குழந்தைகள் இறந்துள்ளன. குழந்தைகள் இறந்ததற்கு இந்தியாவில் சில நிறுவனங்கள் தயாரித்த மருந்துகளே காரணம் என உலகசுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இருமலை குணப்படுத்தும் மருந்து களான ப்ரோமெதாசின் (வாய்வழி தீர்வு), கோஃபெக்ஸ்மாலின் குழந்தை இருமல் மருந்து, மாகோஃப் பேபி காஃப் மருந்து, மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் ஆகிய வற்றை காம்பியாவைச் சேர்ந்த குழந்தை கள் உட்கொண்டதால் அவர்கள் இறந்திருக்க லாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “தயவுசெய்து சம்பந்தப் பட்ட மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்,  மக்கள் தாங்கள் அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்கள் இந்த மருந்துகளைப் பயன் படுத்தியிருந்தால் அல்லது ஏதேனும் எதிர்மறையான பக்க விளைவுகளைக் கொண்டிருந்தால், உரிய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். நோயாளிகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்க இந்த தரமற்ற தயாரிப்புகளை  கண்டறிந்து அகற்றுவது முக்கியமான பணி எனக் கூறியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தில் விஷத்தன்மை கொண்ட ஆபத்தை விளைவிக்கக்கூடிய டைதிலீன் கிளை கோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் இருப்பது கண்டறியப்பட்டது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், இந்த மருந்துகள்  காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டா லும், அவை மற்ற நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டதா என்பது குறித்து  தெரியவில்லை. இதுதொடர்பாக உலக சுகாதார நிறு வனம் மருந்து நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

;