states

கூடுதல் நேரம் மின்சாரம் வழங்க போர்க்கால நடவடிக்கை

சென்னை, மே 7- மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறி க்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது.  விவசாயிகளுக்கு தேவையான மும்முனை மின்சார  நேரத்தை நீட்டியதுடன் மட்டுமல்லாமல், விவசாயிகளின் பெருங்கனவாக இருந்து வந்த மின் இணைப்பு உடனடி யாக வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டது.  அதன் பயனாக, கடந்த 2 ஆண்டுகளில், 1,50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, நடப்பாண்டிற்கான, விவசாய மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் மின்சார பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது.  அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் விவசாய மின்சார இணைப்புகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் இம்மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் உள்ள உயரழுத்த மின் கட்டமைப்பு களில் அவ்வப்போது சில இடையூறுகள் ஏற்படுகிறது.  இத்தகைய இடையூறுகளை முற்றிலும் நிவர்த்தி செய்து, டெல்டா மாவட்ட விவசாய மின் இணைப்புகளுக்கு இன்னும் அதிகப்படியான மணி நேரம்  மும்முனை மின்சாரம் வழங்க தேவையான அனைத்து மேம்பாட்டு பணிகள், போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தேவையான மின்சாரம் வழங்குவதற்கு 24 மணி நேரமும் மும்முனையாக இயங்கக்கூடிய பிரத்தியேகமான மின் பாதையின் வாயிலாக தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும், மின்னகத்தில், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 முறைப்பணிகளில், ஒவ்வொரு முறைப்பணிக்கும் 2 மேற்பார்வையாளர்கள் உட்பட 65 பணியாளர்கள் கொண்டு 24 மணிநேரமும் இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;