- சிறுநீரக பிரச்சனை கார ணமாக சிகிச்சை பெற்று வரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி நிறுவன ருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக் கிடமாக உள்ளதாகவும், உயிர் காக்கும் மருந்துகள் மட்டுமே அவருக்கு அளிக்கப்பட்டு வருவ தாக குருகிராம் மேதாந்தா மருத்துவமனை நிர்வா கம் அறிக்கை வெளியிட் டுள்ளது.
- தமிழ்நாடு சட்டப்பேர வை கூட்டம் அக்டோபர் 17 அன்று தொடங்கும் எனவும், சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என அலுவல் ஆய்வு கூட்டத் தில் முடிவு செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தகவல் தெரி வித்துள்ளார்.
- “எனக்கு இவர்கூட சண்டை; அவர் பக்கத்துல உட்கார முடியாதுன்னு எல்லாம் சட்டப்பேரவை யில் சொல்ல முடியாது” என அதிமுக எதிர்க் கட்சித் துணை தலைவர் குறித்து நிலவும் குழப் பம் தொடர்பான கேள்வி க்கு தமிழ்நாடு சபாநாய கர் அப்பாவு பதிலளித்து ள்ளார்.
- கொரியப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன. இதையடுத்து குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி வட கொரியா பரிசோதித்தது. இதற்கு பதில் கூறும் வகையில் அமெரிக்காவோடு இணைந்து போர்ப்பயிற்சியில் தென் கொரியா ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே ஜப்பான் மற்றும் தென் கொரியாவோடு இணைந்து நடத்தப்பட்ட போர்ப்பயிற்சியிலும் அமெரிக்கா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
- 1961 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட காங்கோ குடியரசின் முதல் பிரதமர் பேட்ரிஸ் லுமும்பா பற்றிய ரகசியங்கள் வெளிவருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அவ ரது கொலை பற்றி விசாரித்த நாடாளுமன்ற ஆணையத்தின் விபரங்களை வெளியிட பெல்ஜியம் நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஆணை யத்தின் அறிக்கை 22 ஆண்டு களுக்கு முன்பாக சமர்ப்பிக்கப் பட்டாலும், அதிலுள்ள விபரங்கள் வெளியாகவில்லை.
- மியான்மர் ராணுவத்தின் பல்வேறு கொடூரமான நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் அரசு துணை நின்றதற்கான ஆவணங்கள் வெளியாகியுள்ளன. “ஆயுதந் தாங்கிய நவீன ராணுவமாக மியான்மர் படையை மாற்ற இஸ்ரேல் உதவியுள்ளது. தொடக்கத்தில் மிகவும் வலுவான அமைப்பாக தன்னை மாற்றிக் கொண்ட மியான்மர் ராணுவம், பின்னர் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டுத் தானே அதிகாரத்தை எடுத்துக் கொண்டது. இதற்கு இஸ்ரேல் தொடர்ந்து உதவியுள்ளது” என்று இது குறித்த அறிக்கை கூறுகிறது.