states

யுஜிசி உறுப்பினருடன் துணைவேந்தர் தேர்வுக்குழுவை அமைத்த ஆளுநர்

சென்னை,செப்.6-  தமிழகத்திற்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற ஆளுநர் ஆர்.என்.ரவி,தனது அடுத்த வேலையை காட்டியுள்ளார். யுஜிசி உறுப்பினருடன் 3 பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.  சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உறுப்பினர் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு விளக்கக் கடிதம் எழுதியிருந்தது. தமிழ்நாடு அரசு விளக்கம் தெரிவித்திருந்த நிலையிலும் யுஜிசி உறுப்பினர் ரத்தோர் என்பவருடன் 4 உறுப்பினர்களை ஆளுநர் ரவி நியமித்துள்ளார்.