states

காசோலை விவகாரத்தில் வங்கி அலட்சியம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூர், செப்.11 - தஞ்சாவூர், ரெட்டிப்பா ளையம் சாலை விக்டோ ரியா காலனியைச் சேர்ந்தவர்  சுப்பிரமணியன் (37). இவர் மருந்து மொத்த விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கணக்கு வைத் துள்ளார். இந்நிலையில், சுப்பிர மணியன் தனது நண்பரான, தஞ்சாவூர் வடக்கு அலங்கம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பா என்பவருக்கு ஐந்து லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து சுப்பிரமணிய னிடம் இருந்து பெற்ற கட னுக்காக, அய்யப்பா தான் கணக்கு வைத்துள்ள, கரூர்  வைஸ்யா வங்கிக் கிளை யின் காசோலை ஒன்றை கடந்த 2023 நவம்பர் 1ஆம் தேதியிட்டு வழங்கினார்.  காசோலையை பெற்றுக் கொண்ட சுப்பிரமணியன், தான் கணக்கு வைத்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிளை யில் வசூலுக்காக, 2023 நவம் பர் 2 அன்று ஒப்படைத்து உள்ளார். இந்நிலையில், காசோலையை வழங்கிய அய்யப்பா என்பவர், வங்கி யினைத் தொடர்பு கொண்டு  தொகையை வழங்க வேண்டாமென நிறுத்தி வைத் துள்ளதாக, சுப்பிரமணியன் மொபைலுக்கு மெசேஜ் வந்துள்ளது.  இது தொடர்பாக, சுப்பிர மணியின் 2023 நவ.18 ஆம் தேதி ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக் கிளையை அணுகி, தான் ஒப்படைத்த காசோலை அசல் மற்றும் காசோலை திருப்பப்பட்டதற்கான வங்கி  குறிப்பாணையை கேட்டு உள்ளார்.  அப்போது வங்கி ஊழி யர் சங்கவி, அய்யப்பா வங்கிக்கு வந்து காசோ லையை பெற்றுக்கொண்டு சென்று விட்டதாகவும், அதனை அய்யப்பாவிடம் இருந்து வாங்கித் தருவ தாகவும் கூறியுள்ளார். மேலும், 2023 நவ.20 ஆம்  தேதி வங்கிக்கு வர  வேண்டும் என சுப்பிர மணியிடம் கூறியுள்ளனர். அதன்படி நவ.20 ஆம் தேதி சுப்பிரமணியன் வங்கிக் குச் சென்று, காசோலை குறித்து கேட்டுள்ளார். அப்போது வங்கி மேலாளர், அய்யப்பா காசோலை அசலையும், காசோலை திருப்பப்பட்டதற்கான வங்கி குறிப்பாணையையும் வாங்கி கிழித்து விட்ட தாகவும், ஜெராக்ஸ் தரு கிறோம் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுக் கொள் ளுங்கள் என சுப்பிரமணி யிடம் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.  புகார் மனுவினை விசா ரித்த ஆணையத் தலைவர் த.சேகர், உறுப்பினர் கே. வேலுமணி ஆகியோர் தஞ்சாவூர் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மேலாளர் காசோலை  மூலம் கிடைக்க வேண்டிய ஐந்து லட்சம் ரூபாயும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தஞ்சா வூர் மேலாளர் மற்றும் சென்னை அலுவலக மண்டல மேலாளர் கூட்டா கவோ அல்லது தனித் தனியா கவோ சேவைக் குறைபாட்டி னால் ஏற்பட்ட மன உளைச் சலுக்கு 10 லட்சம் ரூபா யும், வழக்கு செலவுத் தொகையாக 10 ஆயிரம்  ரூபாயும் என ரூ.15.10  லட்சத்தை சுப்பிரமணி யனுக்கு 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என புதன்கிழமை தீர்ப்பளித்த னர்.