states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

வ ேலையின்மை விகிதம் வீழ்ச்சியடைந்து வருவதாக பிரதமர் மோடி பெருமையடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆய்வுகளின்படி 2023 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே வேலைகள் உருவாகி யுள்ளன; அதுவும்  அத்துக்கூலி வேலைகளே.  இபிஎப் பேரேடுகளின் படி கடந்த ஆண்டு இதே காலத்தில் 55.1 லட்சம் புதிய சந்தாதாரர்கள் உறுப்பினரானார்கள்; இந்த ஆண்டு 49.2லட்சம் சந்தாதாரர்களே பதிவு செய்துள்ளனர். இந்த வீழ்ச்சி, வேலைவாய்ப்பு வீழ்ச்சியையே காட்டுகிறது. குறிப்பாக 18-28 வயதுள்ள இளம் தொழிலாளர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு கடுமையாக வீழ்ந்துள்ளது என்பது இபிஎப் விபரங்களில் தெரியவந்துள்ளது. ஆனால் வழக்கம் போல மோடி துள்ளிக் குதிக்கிறார்.