states

பயிர்க்காப்பீடு செய்வதற்கான அறிவிப்பை வெளியிடுக!

ஈரோடு, ஜூலை 3- அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக விரி வுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாய சங்க பெருந்துறை தாலுகா மாநாடு ஞாயிறன்று ராமசாமி தலை மையில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து விவசாய சங்க திருப்பூர் மாவட்ட செயலா ளர் ஆர்.குமார் உரையாற்றினார். இதில், ஈரோடு மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, மாவட்ட தலைவர் எஸ்.முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஆலை கள், கழிவுநீரை சுத்திகரிக்கப்படாமல் வெளி யேற்றுவதால் அப்பகுதியில் உள்ள விவ சாயக்கிணறுகள் மாசுபாடு அடைந்துள்ளது. இதனால், கிணற்று நீரை குடிக்கவோ, குளிக் கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசாங்கமும், மாசு கட்டுப் பாட்டு வாரியமும் உடனடியாக தலையிட்டு, சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீரை வெளியேற் றும் ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவிநாசி - அத்திக்கடவு திட் டத்தை உடனடியாக விரைந்து செயல்படுத்த வேண்டும். பெருந்துறையில் உள்ள உழவர் சந்தையை உடனடியாக திறக்க நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும். பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.42,  எருமைப் பாலுக்கு ரூ.51 எனவும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் தாலுகா தலைவராக கே.குப்புசாமி, செயலாளராக வி.எஸ்.மணியன், பொருளாளராக பெரிய சாமி,  துணைத்தலைவராக பழனிச்சாமி, துணைச்செயலாளராக முருகானந்தன்  உட் பட 18 பேர் புதிய தாலுகாக்குழு தேர்வு செய் யப்பட்டது.

;