states

கல்விக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்களை சஸ்பெண்ட் செய்வதா?

சென்னை, ஜூலை 5 -  தூத்துக்குடி காமராசர் கல்லூரியில், கல்விக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு இந்திய  மாணவர் சங்கம் (SFI) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ. அரவிந்த சாமி ஆகியோர் விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தூத்துக்குடி மாவட்டம் திருச் செந்தூர் சாலையில் அமைந்துள்ள அரசு உதவி பெறும்  கல்லூரியான காமராஜர் கல்லூரி, இளங்கலை கணினி அறிவியல், இளங்கலை வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கல்விக் கட்டணத்தை 49 ஆயிரத்து 650-ஆக உயர்த்தி உள்ளது. மேலும் கல்வி கட்டணத்திலும் பாரபட்சமாக அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 21 ஆயிரத்து 650, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 26 ஆயிரத்து 650, மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 31 ஆயி ரத்து 650 என்று பிரித்து வைத்து  கல்வி கட்டணம் வசூல்செய்கிறது. இவற்றுக்கு முறையான ரசீது கொடுக்காமல், அலுவலக உத வியாளர் கையொப்பமிடப்பட்ட ஒரு காகிதத்தில் மாணவர்களின் பெயர், துறையின் பெயரை மட்டும் குறிப்பிட்டு மாணவர் களுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்து வருகின்றனர்.  சுயநிதி பாடப்பிரிவு மாண வர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ. 19 ஆயிரத்து 500 என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் 10 சதவிகிதம் மட்டும் கட்டண உயர்வு இருக்கும் என்றும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வரை கட்டணத்தை உயர்த்தி உள்ளது. ரெகுலர் பிரிவு மாணவர் களுக்கு ரூ. 6 ஆயிரம் மட்டுமே  கல்விக் கட்டணமாக வசூலிக்க வேண்டும். ஆனால், நன்கொடை - கட்டணம் என்று முதலாமாண்டு மாணவர்களிடம் ரூ. 25 ஆயிரத்து 200, இரண்டாம் ஆண்டு மாண வர்களுக்கு ரூ. 26 ஆயிரத்து 922 என்றும் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் நிதிச் சுமைக்கு ஆளாகின்றனர். கல்விக் கட்டண உயர்வால் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் மற்றும் நடுத்தர, ஏழைக் குடும்ப பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர்.

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசு தரப்பில் இலவசக் கல்வி  என கூறப்பட்டுள்ளது. ஆனால், பட்டியலின - பழங்குடி மாணவர் களிடம் கல்லூரி நிர்வாகம் கல்விக் கட்டணம் வசூல் செய்வது டன், புத்தகங்களுக்கும் கூடுத லாக கட்டணம் வசூல் செய்து வருகிறது. இந்தக் கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போரா டினால், கல்லூரி நிர்வாக மானது, மாணவர்களின் பெற்றோரை  தொலைபேசியில் அழைத்து மிரட்டுவதையும், மாணவர்களை இடைநீக்கம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளது. மாணவர்கள் நடத்திய 3 நாள் தொடர் போராட்டத்திற்குப் பிறகு, ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்திற்கு உரிய ரசீது வழங்க வேண்டும். ஐந்து நாட்களுக்குள் நிர்வாகம் பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுத்து அதன் விபரத்தை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், மாணவர்கள் மீதான சஸ்பெண்ட் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை நடைமுறையை மீறி போராடிய மாணவர்களை  கல்லூரிக்குள் அனுமதிக்காமல் பழிவாங்கும் நட வடிக்கையை தொடர்ந்து வரு கிறது. இதனால், மாணவர்கள் தற்போது கல்லூரி வளாகத் திற்குள் உள்ளிருப்புப் போராட்ட த்தையும் நடத்தி வருகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசும், உயர்கல்வித் துறையும் இந்த பிரச்சனையில் தலையிட்டு, அரசு உதவி பெறும் கல்லூரிக்கு என நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மட்டுமே கல்லூரி நிர்வாகம் வசூலிக்கவும், போரா டிய மாணவர்கள் மீதான இடை நீக்கத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு  அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

;