states

கரும்பு வெட்டும் தொழிலாளர் மாநில மாநாடு

தருமபுரி, ஜன. 31 -  தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலா ளர்கள் சங்கத்தின் 4 ஆவது மாநில மாநாடு  அரூர் ரவுண்டானா அருகே உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் என்.பழனி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் சி.துரைசாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.வி.சொக்கநாதன், வரவேற்புரையாற்றினார். விதொச மாநில செயலாளர்  எம்.முத்து மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்  ஈ.கே.முருகன், வேலை அறிக்கையும், பொருளாளர் முனுசாமி வரவு செலவு அறிக்கையும் முன்வைத்தனர்.

தீர்மானங்கள்

கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவேண்டும். குழு காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பிரிமியத் தொகையை ஆலை நிர்வா கமே செலுத்திட வேண்டும். தனியாக நலவாரியம் அமைத்து, சிறப்பு நிதியம் அமைக்கவேண்டும். கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது பாம்பு கடித்தோ, விசப்பூச்சிகள் கடித்தோ மரண மடைந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நிதியாக ரூ.10 லட்சம் வழங்கவேண்டும். நிலமற்ற கரும்பு வெட்டும் விவசாயத் தொழி லாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வினியோகம் செய்யவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டில், 21 பேர்கொண்ட மாநிலக் குழுவிற்கு மாநிலத்தலைவராக ஈ.கே.முருகன், மாநில செயலாளராக சி.துரை சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலா ளர் வீ.அமிர்தலிங்கம், நிறைவுரையாற்றி னார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.கோவிந்தன் நன்றி கூறினார்.
 

;