states

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம்

சென்னை, நவ. 29- விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம் மூன்று வகை களில் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. மாநில, தேசிய மற்றும்  சர்வதேச அளவிலான போட்டி களில் பதக்கங்கள் வென்ற தமிழ் நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங் கனைகளுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்படும். விண்ணப் பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ் நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான வின்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செ்ய்யப்படும்.

அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்ப தாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக் கப்படுவர். இறுதியாக தேர்ந்தெ டுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் அவர்களுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் இணையதளம் sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ண ப்பங்களை வரும் 30ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 15 மாலை 5 மணி வரை சமர்ப்பிக் கலாம். ஏற்கனவே அஞ்சல் வழியில் அல்லது நேரடியாக விண்ணப்பித்தி ருந்தாலும், மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப் பங்களைத் தவிர பிற விண்ணப்பங் கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப் படமாட்டாது. மேலும் விவரங்க ளுக்கு ஆடுகளம் தகவல் மையத் தினை அனைத்து வேலை நாட்க ளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ள லாம் என அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;