states

img

என் வாழ்வில் மறக்க முடியாத தோழர்

தோழர் என்.சங்கரய்யா நாட்டின் விடுதலைக்காகவும் நாட்டில் முற்போக்கான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கும்  ஆற்றிய பணிகள் மகத்தானவை. அவர் விடு தலைப் போராட்ட காலத்திற்கும் தற்போதைய காலகட்டத்திற்கும் ஓர் இணைப்புப் பாலமாக செயல்பட்டவர். உடல் நலம் காரணமாக அவர் சமீப காலங்களில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கமுடியாமல் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு குரோம் பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு நான் சென்றிருந்தபோது பத்திரிகைகளை படிப்பதையும் விச யங்களை கேட்டு அறிந்து கொள்வதி லும் தெள்ளத்தெளிவாக இருந்தார்.  வயது முதிர்ந்த காலத்திலும் புரட்சி கர இயக்கத்தின் மீது ஆழமான நம்பிக்கையை அவர் கொண்டிருந் தார். அவர் நீண்டகாலம் வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல, அத்தனை ஆண்டு களும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்ததோடு உயர்ந்த சிந்தனையை யும் உழைக்கும் வர்க்கத்திற்காக நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற உறுதியையும்  அவர்  கொண்டி ருந்தார். அவரை எனக்கு 50 ஆண்டு களாக தெரியும்.  எனது வாழ்க்கை யில் மறக்க முடியாத நபர்களில் அவரும்ஒருவர். இவ்வளவு ஆண்டுகாலம் அவர் வாழ்ந்ததையும் நமது இயக்கத் திற்கு அவர் ஆற்றிய  மகத்தான பணி களையும்  நாம் அனைவரும் கொண்டா டினோம். அவரது மறைவு நமக்கு பெரும் துயரத்தை தந்துள்ளது. சங்க ரய்யா மறைவு குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள புகழஞ்சலி யில், “சங்கரய்யாவுக்கு மதுரை காம ராசர் பல்கலைக் கழகத்தின் மூலம் கவுரவ முனைவர் பட்டம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப் பட்ட நிலையில் தமிழ்நாட்டின் விடு தலைப் போராட்ட வரலாற்றை அறி யாத– குறுகிய மனம் படைத்த சில ரது சதியால் அது நடந்தேறாமல் போன தை எண்ணி மனம் வருந்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதை நானும் நினைவு கூர்ந்து, எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நபராக விளங்கிய தோழர் என்.சங்கரய்யாவுக்கு மீண்டும் ஒரு முறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.