states

img

குடும்ப அரசியலைப் பற்றி பேச பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?

கர்நாடகத்தில் மட்டும் 16 வாரிசுகள் பாஜகவில் உள்ளனர்

பெங்களூரு, ஜூலை 9 - “குடும்ப அரசியல், வாரிசு அரசியல் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை” என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான எச்.டி. குமாரசாமி கடுமையாக சாடியுள்ளார். அண்மையில் தெலுங்கானாவில் நடை பெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தென்னிந் தியாவில் மிக விரைவில் குடும்ப அரசியலை பாஜக முடிவுக்கு கொண்டு வரும் என்று கூறியிருந்தார். கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் மகன் எச்.டி. குமாரசாமி, தெலுங்கானாவில் அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகரராவின் மகன் கே.டி. ராமராவ், ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் மகனும் தற்போதைய தமிழ் நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் ஆகி யோரை மனத்தில் வைத்தே அமித்ஷா இவ்வாறு கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், பாஜக-வில் இருக்கும் வாரிசுத் தலைவர்கள் 16 பேர்களின் பெயர்க ளைப் பட்டியலிட்டு, குடும்ப அரசியல் பற்றிப் பேச பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று  எச்.டி. குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். “நான் அதிர்ஷ்டத்தின் மூலமாக முதலமைச்சர் ஆனேன் என்று நீங்கள் (பாஜக தலைவர்கள்) கூறுகிறீர்கள். அப்படியானால், தற்போது முதல்வராக உள்ள பசவராஜ் பொம்மை மக்கள் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டாரா? மதச்சார் பற்ற ஜனதாதளம் கட்சியை குடும்ப அரசியல் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். ஏன் பாஜக-வில் குடும்ப அரசியல் இல்லையா?  எடியூரப்பா & அவரது மகன்கள், ரவி சுப்பிரமணி அவரது மகன் தேஜஸ்வி சூர்யா, அசோக் - ரவி, வி.சோமண்ணா - அருண் சோமண்ணா, அரவிந்த் லிம்பாவலி - ரகு, எஸ்.ஆர். விஸ்வநாத் -வாணி விஸ்வநாத், ஜகதீஷ் ஷெட்டர் - பிரதீப் ஷெட்டர், முருகேஷ் நிராணி - ஹனு மத் நிராணி, ஜி.எஸ். பசவராஜூ - ஜோதி கணேஷ், ஜர்கிஹோலி குடும்பம், கட்டி குடும்பம், ஜோல்லே குடும்பம், அங்காடி குடும்பம், உதாசி குடும்பம், ஸ்ரீராமுலு குடும்பம், ரெட்டி சகோத ரர்கள்.... - இப்படி பாஜக-வின் குடும்ப ஆட்சி பட்டியல் இன்னும் நிறைய இருக்கிறது. பாஜக என்பதே குடும்ப அரசியலின் சங்கிலித் தொடர்தான். கர்நாடகாவில் மட்டுமே இந்த (16 பேர் கொண்ட) பட்டியல். பாஜக-வில் உள்ள நாடு தழுவிய வாரிசு அரசியலையும் நான் அம்பலப்படுத்தட்டு மா?” என்று குமாரசாமி பாஜக-வினரை விளாசி யெடுத்துள்ளார்.