வெல்லிங்டன், மே 3- நியூசிலாந்தில் ஏற்க னவே கணிக்கப்பட்டதை விட விரைவாக கடல் மட்டம் உயர்ந்து கொண்டி ருக்கிறது. சுற்றுச்சூழல் மாற்றங் களும், வெப்பமயமாதலும் ஒவ்வொரு ஆண்டும் சராசரி யாக 3.5 மில்லி மீட்டர் அள வுக்கு கடல் மட்டத்தை உயர்த்திக் கொண்டிருக் கின்றன. நியூசிலாந்தின் சில பகுதிகளில் கடல் மட்டம் உயர்வது கணிக்கப்பட்டதை விட இரட்டிப்பாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள பல்வேறு ஆய்வுகளின்படி 2100 ஆம் ஆண்டுக்குள் உலக அளவிலான கடல் மட்டம் 0.6 மீட்டர் அளவுக்கு உயர விருக்கிறது. நியூசிலாந்தில் இந்த உயர்வு 1.2 மீட்டராக இருக்கப் போகிறது.