சென்னை,ஜூன் 21- மூடப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளில் பணி புரிந்த ஊழியர்களுக்கு உட னடியாக மீளப் பணி வழங்க வேண்டும் என்று சிஐ டியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேள னத்தின் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் வெளி யிட்டுள்ள அறிக்கை வரு மாறு: ஜூன் 21 தேதியிட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக் கையில் சட்டமன் றத்தில் அறிவித்தபடி 500 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கான அரசாணையை 20.04.2023 அன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளி யிட்டதை சுட்டிக்காட்டி ஜூன் 22 முதல் 500 டாஸ்மாக் கடை கள் மூடுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ள தாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மூடப்படும் ஒவ் வொரு கடையின் பின்னணி என்பதை டாஸ்மாக் நிர்வா கம் வெளிப்படையாக அறி விக்கப்படவில்லை. மூடப் படும் கடையானது புதனன்று இரவுடன் விற்பனை முடித்து, சரக்கு இருப்பு மற்றும் தள வாடப்பொருட்களை நிர்வா கத்திடம் ஒப்படைப்பதற் கான வழிகாட்டுதலும் செய் யப்படவில்லை.
முந்தைய ஆட்சிக் காலத் தில் இது போன்று அரசின் கொள்கை முடிவு என்ற அடிப்படையில் இரண்டு முறை 500 வீதம் 1000 கடை கள் மூடப்பட்டன. மூடப் பட்ட கடைகளில் பணி புரிந்த 5000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பொருத்த மான மீளப்பணி வழங்காமல் இன்று வரை செயல்படும் கடைகளில் கூடுதல் மற்றும் தற்காலிக ஏற்பாடாக கடை பணி செய்து வருகின்றனர். இதனால் விற்பனை குறை வான கடைகளில் அதிக எண்ணிக்கையிலும், அதிக விற்பனையாகும் கடை களில் குறைவான எண் ணிக்கையிலும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போதும் இந்த நிலைமை நீடித்து வருகிறது. தற்போதைய ஆட்சியில் மூடப்படும் 500 கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மீளப்பணி குறித்து டாஸ் மாக் நிர்வாகமும், அரசும் எந்தவித அறிவிப்பும் செய்யாமல் இருப்பது ஊழி யர்களிடையே அச்சத்தை யும் பதற்றத்தையும் ஏற் படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் நேரடி யாக தலையிட்டு ஊழி யர்களின் பணி பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் வகை யில் மூடப்படும் கடை ஊழி யர்களுக்கு பொருத்தமான மீளப்பணி வழங்க வேண் டும். விற்பனை அடிப்படை யில் ஊழியர்களை பணி நிர வல் செய்ய வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஆக்கப்பூர்வமான வழி காட்டுதலை செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.