states

சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்க: கே.எஸ்.அழகிரி

சென்னை,ஏப்.2- சொத்துவரி உயர்வை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலி யுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வரவிருக்கிறது. தமிழக முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமை யல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர் வினால் அனைத்து பொருட்களின் விலை யும் உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிற பொது மக்கள் இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை ஒரே கட்டமாக நடை முறைக்கு கொண்டு வராமல், ஆண்டுக்கு  10 விழுக்காடு வரி உயர்வு என்ற அடிப்படை யில் மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.