states

பாஜகவுக்கு எதிராக எந்த விலை கொடுக்கவும் தயார்: சரத்பவார் அதிரடி

மும்பை, மே 23- மகாராஷ்டிராவில் பாஜக-வுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைக்கக் கூடும் என தகவல் பரப்பப்பட்டு வரும் நிலையில், இது குறித்து அக்கட்சியின் தலைவர் சரத்  பவார் சில விளக்கங்களை அளித் துள்ளார். அதில், பாஜகவுடன் சேர மாட்டோம் என்றும், அதற்காக எந்த  விலை கொடுக்கவும் நாங்கள் தயா ராக இருக்கிறோம் என்றும் குறிப் பிட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஜெயந்த் பாட்டீலிடம், அமலாக்கத் துறையினர் அண்மையில் விசா ரணை நடத்தியிருந்தனர். இதனைக்  குறிப்பிட்டே, “ஆளும் தரப்பினரின்  (பாஜகவினரின்) எதிர்பார்ப்பு களைப் பூர்த்தி செய்ய மறுத்ததன்  காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். “என்சிபி கட்சியினர் கஷ்டப்படு வார்கள் என்ற போதிலும் தங்கள் பாதையில் இருந்து ஒருபோதும் விலக மாட்டார்கள்” என்று கூறி யுள்ளார். “இப்போது இருக்கும் அரசு என்சிபி கட்சியைச் சேர்ந்த 9-10 தலை வர்களிடம் சில விஷயங்களை (பாஜகவினர்) எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு நாங்கள் தயாராக இல்லை. இதற்காக என்ன விலை கொடுக்க வேண்டி இருந்தாலும் தயாராக இருக்கிறோம். நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம்.  சிலரால் என்சிபி-யின் நிலைப் பாட்டை ஜீரணிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் தொல்லை தரு கிறார்கள். ஆனால், அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரசின் முக்கி யத் தலைவரும் முன்னாள் அமைச்ச ருமான அனில் தேஷ்முக், 2021 நவம்  பரில் பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத் துறையால்  கைது செய்யப்பட்டார்.  இதனைக் குறிப்பிட்டுப் பேசி யிருக்கும் சரத் பவார், “எங்கள் கட்சி யில் இருந்து விசாரணையை எதிர் கொண்ட முக்கிய தலைவர்களின்  பட்டியல் என்னிடம் உள்ளது. இதில் பல குற்றச்சாட்டுகள் பொய்யான  மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.  இதுகுறித்து சரத் பவார் கூறுகை யில், “கல்வி நிறுவனம் ஒன்றிடம் இருந்து அனில் தேஷ்முக், 100  கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதா கப் புகார் எழுந்தது. இருப்பினும், விசாரணையில் அது 100 கோடி இல்லை 1.5 கோடி என்பது தெரிய வந்தது. திட்டமிட்டு இதுபோன்ற பொய்யான தகவல்களைப் (பாஜகவினர்) பரப்புகிறார்கள். முதலில் பொய்யாகப் பரவும் இந்த  100 கோடி என்பது மக்களுக்கு நிச்ச யம் அதிர்ச்சியாகவே இருக்கும். இருப்பினும், உண்மை என்ன வென்று மக்களுக்கும் விரைவாகப்  புரிந்துவிடும்” என்று நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.