states

மின்துறையினர் மீது ‘எஸ்மா’ பாயுமாம்!

புதுச்சேரி, அக்.2- மின்துறை தனியார் மயமாக்க லுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சி யினர் ஆளுநர் தமிழிசை மற்றும் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்நிலையில் மக்களை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத் தும் மின்துறையினர் மீது எஸ்மா பாயும் என்று ஆளுநர் தமிழிசை கூறி யுள்ளார். புதுச்சேரி அண்ணாசாலையில் காமராஜர் சிலை வரை திமுக, காங்கி ரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்  தைகள், மதிமுக, சிபிஐ (எம்-எல்) உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் மனித சங்கிலி ஞாயிறன்று நடை பெற்றது. புதுச்சேரி மின்துறையை தனியாருக்கு தர டெண்டர் விடப்பட் டதை எதிர்த்து பதாகைகள் கோஷங்  கள் அதிகளவில் எழுப்பப்பட்டன.  இந்நிகழ்வில் திமுக மாநில  அமைப்பாளர் சிவா, காங்கிரஸ் மாநி லத்தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், எம்எல்ஏ வைத்தியநாதன், இந்திய  கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் சலீம்,  சிபிஎம் மாநிலச் செயலர் ராஜாங்கம்,  விடுதலைச் சிறுத்தைகள் தலையாரி, சிபிஐ (எம்எல்) பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி,  எம்எல்ஏக்கள் சம்பத், அனிபால் கென்னடி, வைத்தியநாதன் உள்ளிட்  டோர் பங்கேற்றனர். அப்போது காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆளுநர் தமி ழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச் சர்கள் ஆகியோர் வருவதாக காவல்  துறையினர் தெரிவித்தனர்.  அவர்கள் மாலை அணிவிக்க வந்தபோது மனித சங்கிலியில் ஈடு பட்டோர் மின்துறை தனியார் மய மாக்கத்துக்கு எதிராகவும், ஆளுநர், பாஜகவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். அப்போது ஆளுநர் தமிழிசை கூறுகையில், “போராட்டம் ஒடுக்  கப்படும். விஷமதனமாக திட்டமிட்டு மின்தடையை ஏற்படுத்தியுள்ளனர். செயற்கை மின்தட்டை ஏற்படுத்து வது சரியல்ல. அத்தியாவசிய சேவைக்கு என்ன நடவடிக்கையோ எடுக்கப்படும். மின்வெட்டு சீராக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்  களை பாதிக்கும் வகையில் போராட்  டம் நடத்தும் மின்துறையினர் மீது  எஸ்மா சட்டம் பாயும் வாய்ப்புள் ளது” என்று தெரிவித்தார்.

;