states

“கள ஆய்வில் முதல்வர்” திட்டம் அறிமுகமாகிறது

சென்னை,ஜன.30- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கள ஆய்வில் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை மாவட்ட வாரியாக செயல்படுத்த உள்ளார். இந்த திட்டத்தை வேலூரில் பிப்ரவரி 1  அன்று தொடங்கி வைக்க உள்ளார்.  இதற்காக வேலூருக்கு ரயிலில் செல் கிறார். அங்கு அவரை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரி கள் வரவேற்கிறார்கள். முதல் நிகழ்வாக, விவசாய சங்கப்  பிரதிநிதிகள் சுய உதவிக் குழுக்கள், தொழில் அமைப்புக ளின் கருத்துக்களையும் கோரிக்கை களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கேட்கிறார். மாலை 4 மணிக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துறை துணைத் தலைவர், காவல் துறை தலைவர் (வடக்கு) ஆகி யோருடன் அந்தந்த மாவட்டங்களின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார்.  முதலமைச்சரின் வேலூர் பயணம் குறித்து உயர் அதிகாரி கூறியதாவது:-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு காரில் செல்வது வழக்கம். இந்த முறை அவர் ரயிலில் செல்கிறார். பிப்ரவரி 1 அன்று வேலூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் ரூ. 700 கோடி மதிப்பில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு கிறார். மாலை 5 மணிக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மாணவர்  விடுதி, ஆராய்ச்சி பூங்கா உள்ளிட்ட  கட்டிடங்களை திறந்து வைக்கிறார். இரவு வேலூர் சரக சட்டம்-ஒழுங்கு  குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஆய்வு மேற்கொள்கிறார்.  பிப்ரவரி 2 அன்று  வேலூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமல ஆகிய 4 மாவட்ட  ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொள் கிறார். அதன்பிறகு, சென்னை திரும்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

;