states

பொருளாதார நெருக்கடி மூலம் கேரள மாதிரியை ஒழிக்க முயற்சி

கொச்சி, ஜன.18- பட்டினிக் குறியீட்டிலும், வறுமை யிலும் மிகவும் பின்தங்கியுள்ள நாட்  டில், சாதாரண மக்களுக்காக அரசு  செயல்படுத்தி வரும் மாற்றுக் கொள் கைகளை இல்லாதொழிக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். எர்ணாகுளத்தில் என்ஜிஓ யூனிய னின் வைர விழா கொண்டாட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அப் போது அவர் மேலும் கூறியதாவது:  வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. ஒன்றிய அரசின் கீழ் பத்து லட்சம் பணியிடங்கள் காலி யாக உள்ளன. அதை நிரப்பவோ, மக்க ளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவோ, ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உழைக்கும் வயதில் உள்ள 90 கோடி பேருக்கு வேலை வழங்கப்படவில்லை. அமைப்பு ரீதி யான தொழில் துறையிலும் எதிர்மறை யான தலையீடுகள் நடைபெறு கின்றன.

குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அமைப்பு உரிமையை அகற்ற ஒரு பெரும் நகர்வு நடைபெறுகிறது. என்.ஜி.ஓ யூனியன் சமூக ஈடு பாட்டுடன் பல விஷயங்களை நல்ல  முறையில் செயல்படுத்தி வருகிறது. ‘சம்பள சவால்’ உள்ளிட்ட நல்லதொரு தலையீடு இருந்தது. ஊழலற்ற அர சுப்பணியாக என்.ஜி.ஓ. சங்கத்தின ரால் மட்டுமே செயல்பட முடியும். வலது சாரி அரசுகள் ஆட்சியில் இருந்த போது சேவைத் துறை பெரிய பிரச்ச னைகளை எதிர்கொள்ள வேண்டியி ருந்தது. சேவைத்துறை ஊழியர்களை யும், பொதுமக்களையும் பிரிக்க பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மற்ற மாநிலங்களை விட கேரளா வில் சிவில் சர்வீஸ் திருப்திகரமாக உள்ளது. ஆனால் அந்த திருப்தி மக்க ளுக்கு வழங்கப்படும் சேவையின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.  பல மாநிலங்கள் முடக்கப்பட்டபோது அல்லது சம்பளத்தை குறைக்கும்  போது, நாங்கள் ஊதிய சீர்திருத்தங் களை அமல்படுத்தினோம். ஆனால்,  அரசுப் பணியில் இன்னும் செயல் திறனை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கான கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.