states

569 உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் 36 பேர் மட்டுமே எஸ்சி,எஸ்டி நீதிபதிகள்

விபரங்கள் இல்லையாம்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிய மனத்தில் உச்சநீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து சமூக பன்முகத்தன்மை தொடர்பான தரவுகளை பதிவு செய்யும் திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அர சாங்கத்தால் துவங்கப்பட்டது. ஆனால் மூத்த  வழக்கறிஞர்களில் எஸ்சி, எஸ்டி உறுப்பினர் களின் எண்ணிக்கை குறித்து குறிப்பிட்ட விவரங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிதில்லி, மார்ச் 22- 2018-ஆம் ஆண்டு முதல் உயர்நீதிமன்றங் களில் நியமனம் செய்யப்பட்ட 569  நீதிபதிகளில் 36  பேர் மட்டுமே எஸ்சி, எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த வர்கள் என ஒன்றிய சட்ட அமைச்சகம் நாடாளு மன்றத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.   நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ரவிக்குமார் (விசிக - தமிழ்நாடு), நபா குமார் சரனியா (கண சுரக்சா கட்சி - அசாம்) ஒன்றிய அரசிடம் (இரு வரும் தனித்தனியாக கேள்வி - ஒன்றாக சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது), “உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள், வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி. வழக்கறிஞர்களின் விவரங்கள்; நீதி மன்ற வாரியாக சமீப காலங்களில் உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முன்மொழியப்பட்ட எஸ்சி, எஸ்டி நீதி பதிகள், வழக்கறிஞர்களின் விவரங்கள்; சுதந்தி ரத்திற்குப் பிறகு உயர்நீதிமன்றங்கள், உச்சநீதி மன்றங்களில் எஸ்சி, எஸ்டி நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் விபரம்; எஸ்சி,எஸ்டி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 இன் கீழ் வழக்குகள்/மேல்முறையீடுகளை விசாரிக்க  சிறப்பு பெஞ்சைக் கொண்ட உயர்நீதி மன்றங்களின் விவரங்கள் என்ன?” என பல்வேறு கேள்விகள் எழுப்பினர். இதுகுறித்து ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்தில் கூறியதாவது:

“நாட்டில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன. இந்த உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1114 ஆகும். அதில் 840 நீதிபதிகள் நிரந்தரமாகவும் மீத முள்ள 274 பேர் கூடுதல் நீதிபதிகளாகவும் உள்ள னர். மார்ச் 1, 2023 நிலவரப்படி 333 நீதிபதி இடங்கள் (சுமார் 29%) காலியாக உள்ள நிலை யில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் உயர்நீதி மன்றங்களில் மொத்தம் 569 நீதிபதிகள் நிய மிக்கப்பட்டுள்ளனர். 569 நீதிபதிகளில் 17 பேர்  பட்டியல் சாதியினர் (எஸ்சி), 9 பேர் பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி), 64 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), 15 பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 20 நீதிபதிகளின் சமூகப் பின்னணி குறித்த தகவல்கள் அரசிடம் இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் அர சியலமைப்பின் 217 மற்றும் 224 வது பிரிவின் கீழ் செய்யப்படுகிறது. இது குறிப்பிட்ட சாதி  அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை. எவ்வாறாயினும், உயர்நீதித் துறையில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மைக்கு அரசு உறுதிபூண்டுள்ளது. நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான முன் மொழிவுகளை அனுப்பும் போது, எஸ்சி,  எஸ்டிகளைச் சேர்ந்த தகுதியான வேட்பாளர் களை உரிய பரிசீலனை செய்ய வேண்டும் என்று  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் ஒன்றிய அரசு கோரிக்கை விடுத்து வருகிறது” என்று அவர் கூறினார்.

நீதிமன்ற இணையதளங்களில் உள்ள தக வல்களின்படி, (டிசம்பர் 11, 2021 நிலவரப்படி) உச்சநீதிமன்றத்தில் 436 மூத்த வழக்கறி ஞர்கள், 3,041 வழக்கறிஞர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள தாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்தார். மேலும், உயர் நீதிமன்றங்களில் சுமார் 1,306 மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்களின் எஸ்சி, எஸ்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த குறிப்பிட்ட விவரங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை எனவும் கூறினார். தொடரும் பாகுபாடு எஸ்சி,எஸ்டி நீதிபதிகள் நியமனம் குறித்து ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் பல்வேறு கருத்துகள் கூறினாலும், மார்ச் 16, 2023 நில வரப்படி கொலீஜியம் 124 பெயர்களை உயர்  நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத் துள்ளது. அவை ஒன்றிய அரசு மற்றும் உச்ச நீதி மன்ற கொலீஜியத்தின் பரிசீலனையில் உள்ளன.  இதில், நான்கு பேர் மட்டுமே எஸ்சி பிரிவையும், மூன்று பேர் மட்டுமே எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.