states

புதிய பெட்டிகளுடன் ஊட்டி மலை ரயில் சோதனை ஓட்டம்

நீலகிரி,ஏப்.26- நீலகிரி மாவட்டம் குன்னூர் வழியே மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் புதிய பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரயில் பெட்டிகளை மாற்ற தெற்கு ரயில்வே நிர்வாகம் தீர்மானித்தது.இதையடுத்து சென்னையில் உள்ள ஐ.சி.எப். ரயில் பெட்டி தொழிற்சாலையில் புதிதாக ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டன. நீர்வீழ்ச்சி மற்றும் இயற்கை காட்சிகளை எளிதாக கண்டு ரசிக்கும் வகையில், பெட்டிகளின் இரு பக்கவாட்டிலும் அதிகளவு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே பர்னஸ் ஆயிலில் இயங்கும் இன்ஜின் மூலமும் குன்னூர் – ஊட்டி இடையே டீசல் இன்சின் மூலமும் இயக்கப்படும் இந்த ரயிலில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக விரைவில் புதிய பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இந்த புதிய பெட்டிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.