states

விமான டிக்கெட் போல் உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்

சென்னை, அக். 1- தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்தும் சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர் விடுமுறை தமிழ்நாட்டில் கடந்த 28ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறி விக்கப்பட்டது. மேலும் 28ஆம் தேதி வியாழக் கிழமை மிலாடி நபியை முன்னிட்டு விடு முறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதிநாட்களாக அமைந்தது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது.

இதனால் 5 நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக அமைந்தது. சென்னையில் இருந்து பலரும் விடுமுறையை கழிக்க தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற னர். கட்டணம் உயர்வு தமிழக அரசு சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங் களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. அனைவரும் மீண்டும் சென்னை திரும்ப உள்ள நிலையில் ஆம்னி பேருந்து களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள் ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 3 மடங்கு உயர்வு தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து  சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்தில் ஒரு டிக்கெட் விலை 4,620 ரூபாயாக உயர்த்த ப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து கட்டணம் 4,700 ரூபாயாகவும், மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் 4,710 ரூபாயா கவும் அதிகரிக்கப்பட்டுள்ளது, தூத்துக்குடி யில் இருந்து சென்னை வரும் ஆம்னி  பேருந்துகளின் கட்டணமும் உயர்ந்துள்ளது. கோவையில் இருந்து சென்னைக்கு 4,510 ரூபாயாகவும், திருச்சியில் இருந்து சென்னைக்கு 4,600 ரூபாயாகவும் அதி கரித்துள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வால் பயணிகள் சென்னை திரும்ப முடி யாமல் அவதி அடைந்துள்ளனர். விழாக்காலங்களிலும், தொடர் விடு முறை நாட்களிலும் ஆம்னி பேருந்து களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தி  வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்து களின் கட்டணக் கொள்ளையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பயணிகள் சிரமம் இன்றி ஊர் திரும்ப அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.