states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இன்று சோனியாவுடன் நிதிஷ் - லாலு சந்திப்பு!

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் ஆகி யோர், ஞாயிறன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து  பேசுகின்றனர். இந்த சந்திப்பின்போது 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோ சிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே நிதீஷ் குமார் பிரதமர் வேட்பாள ராக முன்னிறுத்தப்படலாம் என செய்திகள் பரவி வரும் நிலையில் சோனியா காந்தியுடனான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் உறவை மேம்படுத்த வேண்டும்!

“ஜம்மு - காஷ்மீர் பிரச்சனை சிக்கலான ஒன்று. இங்கு தினமும் என்கவுண்டர்கள் நடைபெறு கின்றன. சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனைகளை சரிசெய்வது முக்கியமானதுதான். அதற்கு பாகிஸ்தான் பிரதமர் முதலில் இந்தியா -பாகிஸ்தான் உறவை மேம்படுத்த வேண்டும். பின்னர் ஜம்மு - காஷ்மீர் பிரச்சனையை சரிசெய்யலாம்” என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்பே இந்தியாவின் முன்னேற்றம்!

“உத்தரகண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தில் பெண் வரவேற்பாளரைக் கொன்றதாக பாஜக  தலைவரின் மகனும் அவருக்குச் சொந்தமான விடுதியில் 2 ஊழியர்களும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், மொராதாபாத்தில் சாலையில் பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து செல்வத்தைக் கண்ட போலீசார் வழக்குப் பதிவு  செய்த, 15 வினாடிகளில் சிசிடிவி காட்சிகள் ஆன்லைனில் வெளிவந்தன. ஒரு விஷயம் தெளிவாகி றது, நாட்டின் பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே நமது இந்தியா முன்னேறும்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மோடி பேச வேண்டும்!

‘‘பிரதமர் மோடி பல சாதனைகளை படைத்தாலும், சிலருக்கு அவரது நடைமுறைகள் பற்றி தவறான கண்ணோட்டம் உள்ளது. எனவே, அனைத்து அரசியல் தலைவர்களையும், பிரதமர் மோடி அடிக்கடி சந்தித்துபேச வேண்டும். இது அவரது நடவடிக்கைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் தவறான புரிதல்கள், சிறிது காலத்தில் நீங்க உதவும்” என்று குடியரசு முன்னாள் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ்-சில் சிகிச்சைகள் நடக்கிறதாமே!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவிகிதக் கட்டுமானப் பணிகள் நிறைவ டைந்து விட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியது, தமிழ்நாட்டு மக்களை  அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 95 சதவிகித கட்டுமானப் பணிகள் முடிந்த அந்த எய்ம்ஸ் மருத்துவ மனையை பார்வையிட பலரும் படையெடுத்தனர். ஆனால், அங்கு மருத்துவமனை இல்லாத நிலையில், நடிகர் வடிவேலுவின் கிணறு காணாமல் போனது போல, மருத்துவமனையும் காணாமல் போய்விட்டதோ? என்று ‘குழப்பம்’ அடைந்துள்ளனர். இந்நிலையில், “மதுரை ஏய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் கட்டுமானப் பணியில் 95 சதவீதம் பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் திரு. நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்? பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?” என்று ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.

காங்கிரசுடன் மம்தா கைகோர்ப்பார்: பவார்

“திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசிய நலன் கருதி காங்கிரஸ் உடனான தனது கருத்து வேறுபாடுகளை மறந்து, 2024-இல் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்கத் தயாராக இருக்கிறார்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். மேற்கு வங்கத் தேர்தலின் போது, பாஜக அதிக இடங்களைப் பெற காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) கூட்டணி உதவியது  என்று மம்தா கருதினார். அந்த விவகாரத்தைத்தான் தற்போது மறப்பதாக தெரிவித்துள்ளதாக சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.

‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சதி!’

புதுதில்லி, செப்.24- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்  னாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்  டியதாக தேசிய புல னாய்வு முகமை குற்றம் சாட்டியுள்ளது. பயங்கரவாத தாக்கு தலைப் போல சித்தரிக்க வும், மிக பயங்கர ஆயு தங்கள் மற்றும் வெடி பொருட்களை வாங்கிக் குவித்து, ஒரே நேரத்தில் உத்தரப்பிரதேச மாநி லத்தின் பல முக்கிய இடங் களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த தாகவும் புலனாய்வு  முகமை குறிப்பிட்டுள்ளது. அதில், பீகார் மாநி லம், பாட்னாவில் கடந்த  ஜூலை 12-ஆம் தேதி நடை பெற்ற பொதுக்‍கூட்டத் தில் பிரதமர் நரேந்திர மோடி  யைக் கொலை செய்ய ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியிருந்த தாகவும், இதற்காக ஒரு பயிற்சி முகாமை ஏற்பாடு  செய்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரி வித்துள்ளது.

காங். தலைவர் பதவிக்கு சசிதரூரும் போட்டியிடுகிறார்

புதுதில்லி, செப்.24- காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டி யிடுவது உறுதியாகியுள்ளது.  இந்நிலையில், அவரை எதிர்த்து காங்கி ரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் கேரள  மாநிலத்தைச் சேர்ந்தவருமான சசிதரூர் போட்டியிட உள்ளார். அதற்கான வேட்புமனு வை சனிக்கிழமை கட்சி தலைவர் தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்றுச் சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு  காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு போட்டி ஏற் பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இருந்து சசி தரூரின் நெருங்கிய உதவியாளர் ஆலிம் ஜாவேரி காங்கிரஸ் தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரியின் அலுவலகத்தில் இருந்து பெற்றுச் சென்றார். சசிதரூர் கடந்த திங்களன்று சோனியா காந்தியைச் சந்தித்து தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். தற்போது காங்கிரஸ் தலைவர்  தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், சோனியா காந்தி நடுநிலையாக இருப்பார் என்றும் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படுவதை சோனியா காந்தி வர வேற்பதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிரந்தரமாக பணி நீக்க சவுக்கு சங்கருக்கு  நோட்டீஸ்

கடலூர்,செப்.24- லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் கடந்த 2003 ஆம் ஆண்டு பணியிடை(சஸ்பெண்ட்) நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு இவர்  மீதான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில்  நிலுவையில் இருந்து வருவதால் இது வரையில் அவருக்கு அரசு ஊதியமாக மாதம் ரூ.40,000 வழங்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரான சவுக்கு சங்கருக்கு ரூ.40 ஆயிரம்  அரசு சம்பளம் எப்படி வழங்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அவரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அரசுக்கு  உத்தரவிட்டது. இந்த நிலையில், கடந்த வாரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியது மதுரை உயர்நீதிமன்ற கிளை சவுக்கு சங்கரை கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டது.  இந் நிலையில் சனிக்கிழமை (செப்.24) கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள், சிறையிலுள்ள சவுக்கு சங்கருக்கு பணி நீக்கம் செய்ததற்கான ஷோ காஸ் நோட்டீசை கொடுக்க சென் றனர். ஆனால் சவுக்கு சங்கர் வாங்க  மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்த நோட்டீஸ் அவரது அறை வாசலில்  ஒட்டப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி சவுக்கு சங்கருக்கு முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விரை வில் பணி நீக்கம் செய்யப்படுவார்.

பெட்ரோல் குண்டுவீச்சு: தலைமை செயலாளர் ஆலோசனை

 கோவை,செப்.24-  கோவை மாநகரில் கடந்த சில  நாட்களாக குனியமுத்தூர், ஒப்பணக் கார வீதி, 100 அடி ரோடு, காந்தி புரம் உள்பட சில இடங்களில் பெட்ரோல்  மற்றும் மண்ணெண்ணெய் குண்டு  வீசப்பட்டது. இதனால் கோவையில்  பதற்றமான சூழ்நிலை உருவாகி யுள்ளது. இதையடுத்து காவல்துறை யினர் கோவையில் குவிக்கப்பட்டு பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளர்  வெ. இறையன்பு சனிக்கிழமை யன்று(செப்.24) ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை  செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஐ.ஜி.சுதாகர், மாநகர  காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை மேற் கொண்டார். அப்போது கோவையில் அமைதியை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

தங்கம் விலை சவரனுக்கு  ரூ.160 குறைந்தது

சென்னை, செப். 24- சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை (செப்.23)  கிராம்  ரூ.4,670 ஆக இருந்தது. சனிக்கிழமை (செப்.24) இது ரூ4,650 ஆக குறைந்தது. ஒரு சவரன் ரூ.37 ஆயிரத்து 360லிருந்து ரூ. 37 ஆயிரத்து 200 ஆக குறைந்து உள்ளது.  இதே போல் வெள்ளி விலையும் குறைந்திருக்கிறது. கிராம் ரூ.62.50-லிருந்து ரூ.61.50 ஆகவும், கிலோ ரூ.62  ஆயிரத்து 500 லிருந்து ரூ.61 ஆயிரத்து 500 ஆகவும் குறைந்து உள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை, செப்.24- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் கால்நடை ஐந்தரை ஆண்டுகள் கொண்ட மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் நான்கு  ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத்  தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக்  படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு 2022 - 23 கல்வி யாண்டு மாணவர் சேர்க்கைக்கு அக்டோபர் 14 ஆம் தேதி  மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.




 

;