states

ஒரு உண்மை தெரிஞ்சாகணும்

‘எனது மனைவி என்னைக் காட்டிலும் 7 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்’ 

- கிறிஸ்துமஸ் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.2021 சட்டமன்றத் தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2020-21 ஆண்டில் அவரது வருமானம் 7 லட்சத்து 67 ஆயிரத்து 020 ரூபாய். அவருடைய துணைவியார் வருமானம் இதன் ஏழு மடங்கு என்றால் - 53 லட்சத்து 69 ஆயிரத்து 140 ரூபாயாக இருக்க வேண்டும்.ஆனால் அந்த அறிக்கையில் தன் துணைவியாரின் வருமானம் என அண்ணாமலை காட்டியது  ரூ.15 லட்சத்து 09 ஆயிரத்து 430. 

அப்படியானால், இரண்டே சாத்தியங்கள்.

1. வருமான வரித்துறைக்கு அண்ணாமலை வருமானத்தைக் குறைத்துக் காட்டியிருக்கிறார்? 
2. தேர்தல் ஆணையத்துக்கும் வருமானத்தைக் குறைத்துக் காட்டியிருக்கிறார்?
அல்லது, கிறிஸ்துமஸ் விழாவில் சொன்னது பொய்.எது உண்மை? அண்ணாமலை விளக்குவாரா?

ஷாஜகான்