states

மொராக்கோ நிலநடுக்கம்: உயிரிழப்பு இரு மடங்கானது

ரபாத், செப். 10 -  வட ஆப்பிரிக்க நாடான மொராக் கோவில் கடந்த 60 ஆண்டுகளாக இல்லாத வகையில் சனிக்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், சுற்றுலா நகரமான மாரகேஷ் கடு மையாக பாதிக்கப்பட்டது. பல நூறு கட்டிடங்கள் இடிந்து விழுந்த தில் முதல் நாள் 1,037 பேர் உயி ரிழந்தனர். கட்டிட இடிபாடுகளுக் குள் சிக்கியுள்ள நபர்களை மீட்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில், இரண்டாவது நாளாக ஞாயிறன்று தொடரும் இந்த மீட்புப் பணி யில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட  அழிவுக்குப்பின், மொராக்கோ விற்கு துருக்கி, பிரான்ஸ், அமெரி க்கா, ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் உதவி வழங்க  முன்வந்துள்ளன.  கடந்த 1960 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 15,000- க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த னர். மேலும் அகாடிர் நகரத்தில் மூன்றில் ஒரு பகுதி  அழிந்தது. தற்போது தீவிரமாக நடை பெறும் மீட்புப் பணிகளுக்கு மத்தி யில், கடினமான நிலப்பரப்புகளில் அமைந்துள்ள தொலைதூர கிரா மங்களை அடைவதில் மீட்புப் பணி குழுவினர் பெரிய சவாலை எதிர் கொள்கின்றனர். குறிப்பாக கரடு முரடான மலைத்தொடராக உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் பல கிராமங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அப்பகுதியை அடைவது மீட்புக் குழுவிற்கு பெரும் சவாலாக  இருப்பதாக கூறப்படுகிறது. மொராக்கோவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில், அங்குள்ள இந்தி யர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வரவில்லை என இந்தியத் தூதரகம் தெரிவித்துள் ளது. மேலும் மொராக்கோ நில நடுக்கத்தில் சிக்கியுள்ள இந்தி யர்களுக்கு அவசர உதவிக்கு 212 661 297 491 என்ற உதவி எண் களையும் ரபாத்தில் உள்ள இந்தி யத் தூதரகம்  வெளியிட்டுள்ளது.