states

ஜூன் 7 பள்ளிகள் திறப்பு

திருச்சிராப்பள்ளி, மே 26- வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7 அன்று திறக்கப்படும் என்று அமை ச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். வருகிற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொலி காட்சி மூலம்  ஆலோசனை நடத்தினார். அப் போது, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளித்தூய்மையை உறுதிசெய்ய வேண்டும். இலவசப் பொருட்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் கட்டாய மொழிப்பாடம் என்ற விதியை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகளை முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பள்ளி திறப்பு தேதி குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் ஆலோ சனை மேற்கொண்டோம். முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக் கிணங்க கோடை வெயிலின் தாக்கம்  அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன்  7-ஆம் தேதி  முதல் பள்ளிகள் மீண்டும்திறக்கப்படும். பள்ளிப் பேருந்துகளை ஆய்வு  செய்வது போக்குவரத்துத்துறையின ரின் பணி. ஆனாலும் கல்வித்துறை அதி காரிகளும் இப்பணியில் ஈடுபடுவார் கள். 

ஆசிரியர் கலந்தாய்வு குளறுபடி களை சரி செய்த பிறகு நடத்த திட்ட மிட்டோம். அதன்படி கலந்தாய்வு நடை பெறுகிறது. சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு கள் நடத்துவதாக பரவலாகச் செய்தி வருகிறது. இதுபோன்று சிறப்புகள் வகுப்புகள் நடத்தக்கூடாது என தனி யார் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறி வுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சில  பெற்றோர்கள் தங்கள் குழந்தை களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த  வற்புறுத்துகின்றனர். கோடை விடுமுறை என்பது பள்ளி  மாணவர்கள் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்காக மட்டுமே. இது  போன்ற சிறப்பு வகுப்புகளை நடத்த பெற்றோர்கள் வற்புறுத்தக் கூடாது . இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

பாடப் புத்தக  குடோனில் ஆய்வு

தொடர்ந்து திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட் பகுதியில் செயல்படும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறு வனத்தில், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் பாடப்புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி, பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லியோனி, தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது. இந்தாண்டு சுமார்  20 சதவீதம் மாணவர் சேர்க்கை அதி கரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படு கிறது. அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான 3.60 கோடி புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.