states

திருச்சூர் பூரம் திருவிழா காண லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்

திருச்சூர், மே 11- நெற்றிப்பட்டம் சூட்டிய  யானைகளின் அணிவகுப்பும்  அவற்றின் மீது முத்துக்குடை யுடன் வந்த வண்ணமயமான மெய்சிலிர்க்கும் காட்சியைக் கண்டுகளிக்க லட்சக்கணக்கான மக்கள் செவ்வாயன்று திருச்சூ ரில் சங்கமித்தனர். ஒன்றரை மணி நேரம் நீடித்த கலைநிகழ்ச்சி களும் அவ்வப்போது பெய்த மழையும் பார்வையாளர்களை குளிர்வித்தன. ஆனால், புதனன்று அதி காலை நடைபெறவிருந்த பூரம்  வாண வேடிக்கை கனமழை கார ணமாக ஒத்திவைக்கப்பட்டது. வாணவேடிக்கை பார்க்க வந்த பல்லாயிரக்கணக்கானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர். புதனன்று இரவு 7 மணிக்கு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடை பெறும் என தேவசம் அதிகாரி கள் தெரிவித்தனர்.