states

பிப்.20 நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி : 1000 ஆசிரியர்கள் பங்கேற்கிறார்கள்

திருப்பூர், டிச. 19- புதிய ஓய்வூதிய திட்டம், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 ஆகியவற்றை ரத்து செய்ய  வலியுறுத்தி இந்தியப் பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பின் சார்பில் 2023 பிப்ரவரி 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி நடத்தப்படும் பேரணியில் தமிழகத்திலி ருந்து ஆயிரம் ஆசிரியர்களை பங்கேற்கச் செய்வது என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஞாயிறன்று திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணி மேகலை தலைமை வகித்தார். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண்கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்டச் செயலாளர் அ.பிரபு செபாஸ்டியன் வர வேற்புரையாற்றினார். பொதுச்செயலாளர் ச.மயில், பொருளாளர் ஜீ.மத்தேயு ஆகி யோர் பேசினர். தமிழ்நாடு முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் வழங்கப்பட்டு வரும் முறைகேடான, விதிகளுக்குப் புறம்பான நிர்வாக மாறுதல்களை தமிழக முதல்வர் தலையிட்டு நிறுத்திட வேண்டும்.

முறை கேடாக வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல் களை ரத்து செய்து விட்டு, இக்கல்வி யாண்டிற்கான பொது மாறுதல் கலந் தாய்வை உடனடியாக நடத்தி தகுதியுள் ளோருக்கு பணி மாறுதல் வழங்கிட வேண்டும். பணி நிரவலில் வேறு ஒன்றியங்க ளுக்குப் பணி மாறுதல் செய்யப்பட்ட ஆசி ரியர்களை விதிகளின்படி சொந்த ஒன்றி யத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு உடனடியாகப் பணிமாறுதல் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சங்கத்தின் சார்பில் சுவரொட்டி இயக்கம் நடத்திடவும் மாநிலச் செயற்குழு முடிவு செய்தது. மேலும், தி.மு.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு, தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண் பாடுகளைக் களைந்து ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், முன்பு வழங்கப்பட்டது போல் ஆசிரியர்கள் பெறும் உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், நிறுத்தி வைக்கப் பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரி மையை மீண்டும் வழங்குதல் ஆகிய கோரிக் கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 2022 ஜூலை 1ஆம் தேதி முதல் ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கி யுள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு உடனடி யாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.