states

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் மீட்பு

திருப்பூர், மார்ச் 31- திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலைத்துறையினர் மீட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  வட்டம்,  நவநாரி கிராமத்தில் அமைந்துள்ள மாரி யம்மன் கோயிலுக்கு சொந்தமாக 15 ஏக்கர் 39 சென்ட் புஞ்சை நிலம் இருந்தது. இந்த  நிலத்தை, சிலர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்திருந்தது தெரியவந்தது. அதேபோல், காங்கயம் வட்டம், மேட்டுப் பாளையம் அருள்மிகு மாந்தீஸ்வரர் மற்றும் புஷ்பகிரி வேலாயுதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 6.39 ஏக்கர் சென்ட் நிலம் ஆக்கி ரமிப்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து மேற்படி ஆக்கிரமிப்பு தாரர்களை வெளியேற்ற திருப்பூர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொ டர்ந்து இரு இடங்களிலும் ஆக்கிரமிப்பு நிலமானது புதனன்று கையகப்படுத்தப்பட் டது. இக்கோயில் நில மீட்பில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இரா.செல்வராஜ், தனிவட்டாட்சியர் கோபால கிருஷ்ணன், தாராபுரம் சரக ஆய்வாளர் வடிவுக்கரசி, கோயில் செயல் அலுவலர் சு.சதிஷ் உட்பட பலர் உடனிருந்தனர். நவநாரி கிராமத்தில் கையப்படுத்தப் பட்ட நிலத்தின் மதிப்பு  ரூ. 2 கோடியே 30 லட் சம், மேட்டுப்பாளையத்தில் கையகப்படுத் தப்பட்ட 6.39 ஏக்கர் சென்ட் நிலத்தின் மதிப்பு ரூ. 6 கோடி ஆகும். மொத்தம் ஒரே நாளில்  ரூ.8.30 கோடி மதிப்பிலான நிலம் கையகப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.