states

img

ஜிஎஸ்டி இழப்பீடு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்

திருவனந்தபுரம், ஜுலை 3- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக நடை பெற்ற கேரள எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் மேலும் பேசியதாவது:  கேரளத்தில் ரயில்வே துறையில் மேம்பாடு ஏற்படவில்லை. அறி விக்கப்பட்ட பல திட்டங்கள் நிறை வேற்றப்படவில்லை. புதிய ரயில் கள், புதிய பாதைகள் மற்றும் பாதை நீட்டிப்பு ஆகியவை நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. விரி வான ரயில்வே மேம்பாட்டிற்கு ஒன் றிய அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதிக்  கக்கூடிய பகுதிகளில் அனைத்து வழிகளிலும் தலையீடு வேண்டும். மாநில அரசு அதிகாரத்துவ ரீதியாக வும் சட்ட ரீதியாகவும் தலையிட்டு  வருகிறது. குடியிருப்பு பகுதிகளை யும், விளைநிலங்களையும் பாது காக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டும். உச்ச நீதி மன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்படும்.

மாநிலங்களின் அதிகாரம் பறிப்பு

ஜிஎஸ்டி இழப்பீடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். பேக்கல்-கண்ணூர், இடுக்கி-திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி-கொச்சி விமானப் பாதை கள் குறித்து பரிசீலிக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொது பட்டியலில் உள்ள பிரச்சனைகள்  குறித்து, மாநிலத்துடன் போதிய ஆலோசனை இல்லாமல், ஒன்றிய  அரசு தொடர்ந்து சட்டம் இயற்று கிறது. மாநிலத்தின் அதிகாரங்களை நாளுக்கு நாள் குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம்  நடந்து வருகிறது. திட்டத்தை கைவிட வேண்டும்.

கனிமச் சட்டத்திருத்தம் ஆபத்து

தற்போது அரசு நிறுவனங்க ளுக்கு மட்டுமே அணு கனிமங்களை வெட்டி எடுக்கும் அதிகாரம் உள்ளது. இந்த விதியை மாற்ற சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் திருத் தம் செய்யப்படுகிறது. இது தேசிய பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்  பான கருத்து ஒன்றிய அரசுக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. நாம் பெரிய அள வில் ஆதரிக்க வேண்டியவர்கள் புலம்பெயர்ந்தவர்கள். ஆனால், அவர்களுக்கு எந்த அளவுக்கு தொல்லை கொடுக்கலாம் என்ப தாக ஒன்றிய அரசின் செயல்பாடு உள்ளது. ரூ.2000 கோடி வெளிநாட்டி னர் மறுவாழ்வுக்கான தொகுப்பு குறித்து இதுவரை சாதகமான பதில் இல்லை. வெளிநாட்டவர்கள் தாய கம் வர வேண்டிய போதெல்லாம் விமானக் கட்டணம் பெருமளவு உயர்த்தப்படுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் விமான கட்ட ணத்தை குறைக்க அவசர நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதனைச்  சுட்டிக் காட்டும்போது, ஒன்றிய அரசு  முடிவெடுக்காமல் கைகழுவி விடு வது கேலிக்கூத்தானது. மாநிலங்க ளின் தகுதியான கடன் வரம்பை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். திருவனந்தபுரம் விமான நிலை யத்தை அதானிக்கு வழங்கியபோது பெரிய மாற்றம் ஏற்படும் என்று  நினைத்த சில வளர்ச்சி ஆர்வலர் களின் நம்பிக்கை பொய்த்துப் போனது.

உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், முன்னு ரிமைப் பிரிவினருக்கு மட்டுமே ரேசன் முறையைக் கட்டுப்படுத்த வேண்டி யிருந்தது. சுமார் அரை லட்சம் பேர் முன்னுரிமைப் பட்டியல் ரேசன்  அமைப்பில் இருந்து வெளியேறி யுள்ளனர். மீனவர்களுக்கான மண்  ணெண்ணெய் ஒதுக்கீடும் குறைக் கப்பட்டுள்ளது. கோதுமையை முழுமையாக இழக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. ரேசன் ஒதுக்கீட்டை மீட்டெடுக்கவும், மண்ணெண்ணெய் குறைப்பை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாடாளு மன்ற உறுப்பினர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.  இவ்வாறு முதல்வர் கூறினார்.  கூட்டத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

;