கடமலைக்குண்டு, ஜூன் 7- தேனி மாவட்டம், மயிலாடும்பாறையில் உள்ள கட மலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் புதன் கிழமை யன்று ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் ஐயப்பன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்காக வரவு, செலவு கணக்குகள் வாசிக் கப்பட்டது. பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கிராம பகுதி களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஆணை யர்கள் பதிலளித்தனர். கூட்டத்தில் ஒன்றிய மற்றும் சுகா தாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.