states

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மாநாடு

சென்னை, மார்ச் 7 – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு 8, 9, 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடை பெறவுள்ளது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வுள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்திய யூனியன் முல்லிம் லீக்  கட்சியின் 75-வது ஆண்டு பவள விழா மாநாடு சென்னையில் 8, 9, 10  ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெறு கிறது. மார்ச் 8 அன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை இராய புரத்தில் உள்ள ரஹ்மான் மஹாலில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்படுகிறது.  நிகழ்வில் கட்சியின் தேசிய தலை வர் கே.எம்.காதர் மொகிதீன், அமைச்சர்  பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு சிறுபான் மையினர் ஆணைய தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். மார்ச் 9 அன்று (வியாழக்கிழமை) பிரதிநிதிகள் மாநாடும்,  நூல்கள் வெளியீடு விழாவும், முஸ்லிம் லீக் சார்பு  அமைப்புகளான முஸ்லிம் இளைஞர் லீக், மகளிரணி, சுதந்திர தொழிலாளர் யூனியன், கே.எம்.சி.சி. உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிகழ்ச்சிகளும், ‘அரசியல் கண்ணியமான வாழ்க்கை’  என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறுகின்றன. மார்ச் 10 அன்று (வெள்ளிக்கிழமை) வாலாஜா சாலையில் உள்ள  காயிதே  மில்லத் நினைவிடத்தில் ஜியாரத் நடைபெறுகிறது. பின்னர் கட்சிக்காக 75 ஆண்டுகளுக்கு மேலாக தியாகம் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. பின்னர் மாலையில் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பவள விழா பொது மாநாடு நடைபெறுகிறது. இதில்  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  கலந்து கொண்டு சிறப்புரையாற்று கிறார். இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் மற்றும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.  நிறைவு விழா நிகழ்ச்சிக்கு இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்  கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்குகிறார். கேரள மாநிலத் தலைவர் செய்யது சாதிக் அலி சிஹாப் தங்கள், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி மற்றும் நாடாளுமன்ற-சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், பல்வேறு மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.