states

27 மாநிலங்களில் கனமழையுடன் கடும் குளிர்

புதுதில்லி காலநிலை மாற்றத்தால் நாட்டில் என்ன  நடக்கிறது என்றே தெரியவில்லை. ராஜஸ்தான் பாலைவனத்தில் கூட வெள்ளப் பெருக்கு அளவிற்கு கனமழை புரட்டியெடுத்து வருகிறது. அதே போல மலை மற்றும் கடற்கரை சம வெளிகளில் இல்லாத பகுதிகளில் ஒரே நாளில் 20 செ.மீ., அதிகமான  அளவில் கனமழை பெய்து வரு கிறது. தற்போது குளிர்காலமும் தொடங்கியுள்ள சூழலில் சாதா ரண வெப்பமண்டல பகுதிகளில் கூட ஊட்டி, கொடைக்கானல் பகுதி களில் நிலவுவது போன்று உறை பனி நிலையில் குளிர் வாட்டி வரு கிறது. இத்தகைய சூழலில் நாட்டின் 27 மாநிலங்களில் கனமழையுடன் கடுமையான குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை எச்சரிக்கை இதுதொடர்பாக இந்திய  வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “லட்சத்தீவு - மாலத்தீவு இடையே  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதே போல  வங்க கடலில் சராசரி கடல் மட்டத்தி லிருந்து 5 கி. மீ. வரை சூறாவளி சுழற்சி தொடர்கிறது. இந்த சுழற்சி  அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு  நோக்கி நகரும். மேலும் அந்தமான்  கடல் - தாய்லாந்து வளைகுடா அருகே ஒரு சூறாவளி சுழற்சி நக ர்ந்து வருகிறது. இதன் தாக்கத்தால்  தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த அழுத்தப் பகுதி உரு வாக்கி, அடுத்த 2 நாட்களில் தமிழ்  நாட்டின் கடற்கரையை நோக்கி நகர  வாய்ப்புள்ளது. இதனால் கேரளா,  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, லட்சத்தீவு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே  போன்று அசாம், மேகாலயா, நாகா லாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவில் சில இடங்க ளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.  பனிப்பொழிவு ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்  சல் மற்றும் அதை ஒட்டிய பகுதி களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசா னது முதல் மிதமான மழை மற்றும்  பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள் ளது. அதே போல பஞ்சாப் மற்றும்  மத்தியப் பிரதேசத்தின் சில பகுதி களில் கடுமையான குளிர் இருக்  கும். உத்தரகண்ட், பஞ்சாபின் வடக்குப் பகுதிகள், ஹரியானா, சண்டிகர் மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தில் குளிர் அதிகமாக நில வும். தில்லி மற்றும் நொய்டா மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகள் கடுமையான குளிர்காற்று வீசும். மொத்தமாக நாடு முழுவதும் 27  மாநிலங்களில் கடுமையான குளிர்  காற்று, மழை மற்றும் பனிப் பொழிவு ஆகியவற்றால் பாதிக்கப்  பட வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.