states

img

கருணாநிதி பெயரில் புதிய கட்டிடங்கள்

வேலூர், பிப்.1- வேலூர் விஐடி பல்கலை கழக வளாகத்தில் முன்னாள் முதல மைச்சர் மு.கருணாநிதி பெயரில் புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன் கிழமை (பிப்.1) திறந்து வைத்தார்.  தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு நாள் பயணமாக வேலூர் சென்றுள்ளார்.  கள ஆய்வில் முதல் வர் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்கி றார். இதற்காக சென்னையிலிருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தார். அவருக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகன், நந்தகுமார் எம்.எல்.ஏ. கதிர் ஆனந்த் எம்.பி. மாநகரச் செயலாளர் கார்த்திகேயன் எம். எல். ஏ, மேயர் சுஜாதா ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வர வேற்பு அளிக்கப்பட்டது.  அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்து கொண்டார். பின்னர் மாலை 6 மணிக்கு வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலை மையில் நடைபெற்ற விழாவில் முத்தமிழறிஞர் மு.கருணாநிதி பெயரிலான மாணவர் விடுதி மற்றும் பேர்ல் ஆராய்ச்சி கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, கைத்தறி அமைச்சர் ஆர்.காந்தி, பல்கலைக் கழக உதவி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவ நாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;