states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அரசு ‘பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை’ பாஜக தான் முதலில் எதிர்த்தது. இந்த திட்டத்தின் வெற்றியைக் கண்டு பயந்து, பெண்களுக்கு மாதம் ரூ.2100 அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை, அனைவரது கணக்கிலும் ரூ.15 லட்சம் என்ற மோடியின் மோசடிகளில் இதுவும் ஒன்று.

மோடி இந்தியாவின் பிரதமர் நாற்காலியை தனது கண்ணியமற்ற மிகவும் கீழ்த்தரமான தேர்தல் பேச்சின் மூலம் தரம் தாழ்த்தி வருகிறார். மகாராஷ்டிராவில் தோல்வி பயத்தால் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி போலீஸ் வாகனங்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டு இருக்கிறது பாஜக.

விவசாய பெருமக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளைத் தான் ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்து வருகிறது. பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு, தனது பணக்கார நண்பர்களுக்கு பணத்தை வாரிக்கொடுக்கிறது.

சாத் பூஜைக்கு இன்னும் 48 மணிநேரமே உள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் சொந்த நாடாளுமன்றத் தொகுதியில் கங்கை நதி மாசு நிறைந்த சாக்கடை நீருடன் பாய்ந்து வருகிறது. அசுத்தங்களுக்கு மத்தியில் சாத் பூஜையை மக்கள் கொண்டாட உள்ளார்கள். இது மிகவும் வெட்கக்கேடானது.