states

தனிநபர் சொத்துக்கள் கும்பல் மோதலில் சேதமடைந்தால் சட்டப்படி விசாரிக்கலாம்

மதுரை, ஜூன் 9 - இரு தரப்பினருக்கு இடையே,  அல்லது தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே ஏற்படும்  மோதலில், தனிப்பட்ட நபர்களின் சொத்துக் களுக்கு இழப்பு ஏற்படும்  போது,  இது குறித்து  சட்டப்படி  விசாரிக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. இரு தரப்பினருக்கு இடையே ஏற்படும் மோதல் குறித்து,  தனியார் சொத்துக்களுக்கு சேதம்  ஏற்படும்  போது,  தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டத்தின் கீழ் விசாரிப்பது குறித்து ஒவ்வொரு நீதிபதியும் ஒரு முரண்பாடான கருத்தை வெளிப்படுத்தினர்.   எனவே  இது குறித்து தெளிவுபடுத்தும் வகை யில் இந்த வழக்கின் விசாரணை  நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு முன்பு வெள்ளியன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளை விப்பது தொடர்பாக சில  மாநிலங்கள் சட்டங் களை இயற்றி உள்ளது.

1992 இன் சட்டம் பிரிவு 59 மிகவும் விரிவானது மற்றும் இது இழப்பீட்டுத் தொகையை வழங்குவது  குறித்தும்  விவரிக்கிறது. 1992 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட மானது, பொதுச் சொத்துரிமைக்கு மட்டுப்படுத்தப் பட்ட நிலையில், 1994 - திருத்தத்தின் மூலம், சட்டம் 46 மூலம், சட்டம் தனியார் சொத்தையும்  உள்ளடக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1992 இன்  முதன்மை  சட்டம் மற்றும் 1994 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம் ஆகியவை தெளிவுபடுத்துகின்றன. அரசியல் கட்சிகள் அல்லது வகுப்புவாத, மொழி அல்லது இன  குழுக்களால்  நடை பெறும்  ஊர்வலங்கள், போராட்டங்கள்,  அல்லது  பிற செயல்பாடுகளின் போது, பொதுச்சொத்துக் களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கு வதற்கான பொறுப்பை ஏற்பாட்டாளர்கள் மீது நிர்ணயிக்கும் நோக்கத்தை அடைய இந்த சட்டம் வரையறுத்து உள்ளது. இதே போல் இந்த சட்டம்  தனியார் சொத்துக் களுக்கும் பொருந்தும் வகையிலும், தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்தையும் குற்றமாக்குவதே சட்டமன்றத்தின் நோக்கம் என்பது தெளிவாகிறது.   தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவதே சட்டமியற்றுபவர்கள் நோக்கம்.  இந்த சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களை ஒரு செஷன்ஸ் நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க வேண்டுமா  என்ற கேள்விக்கு, ‘செஷன்ஸ் நீதி மன்றம்’,  கூடுதல் மற்றும் உதவி செஷன்ஸ் நீதிபதிகளை உள்ளடக்கும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.