ஹைதராபாத், மார்ச் 13- ஹைதராபாத் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, ‘வாஷிங் பவுடர் நிர்மா’ விளம்ப ரத்தைப் பேனராக வைத்து, ஆளும் பாரத ராஷ்டிர சமிதி கட்சி புதுமை யான முறையில் ‘வரவேற்பு’ அளித் துள்ளது. பாரத் ராஷ்டிர சமிதி கட்சித் தலை வரும், தெலுங்கானா முதல்வரு மான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆவார். சட்டமேலவை உறுப்பினராக இருக்கும் கவிதா, பாஜக-வை கடுமையாக விமர்சித்து வருபவர் ஆவார். அண்மையில் தில்லி மதுபான ஊழல் வழக்கில், கவிதாவை இணைத்த சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புக்கள், அவருக்கு சம்மன் அனுப்பி விசா ரணையும் நடத்தி வருகின்றன. இது பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் கவிதா மீதான ஒன்றிய பாஜக அர சின் பழிவாங்கல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கவிதா போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களெல்லாம் ஊழல்வாதிகள் என்றால், கடந்த சில ஆண்டுகளில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி, ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் எல்லாம் கறைபடி யாத கரத்திற்கு சொந்தக்காரர் களா? என்ற கேள்வியை பாரத் ராஷ் டிர சமிதி கட்சி கேட்டு வந்தது. மேலும், பாஜக என்ன, வாஷிங் பவுடர் நிர்மா கம்பெனியா நடத்து கிறது. பாஜகவில் சேர்ந்தவுடன் கறைகளெல்லாம் வெண்மையாவ தற்கு? என்றும் கடுமையாக சாடி வந்தது.
இந்நிலையிலேயே, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) 54-ஆவது உதய தினத்தை யொட்டி, ஹைதராபாத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா வை கேலி செய்யும் வகையில், ‘வாஷிங் பவுடர் நிர்மா’ என்ற வாச கங்களுடன், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியினர் பேனர்களை வைத்துள்ளனர். அத்துடன், நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரத்தில் வரும் சிறுமியின் முகத்திற்கு பதிலாக, பிற கட்சிகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளில் பாஜகவில் இணைத் துக் கொள்ளப்பட்ட சுவேந்து அதி காரி, ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட் டோரின் புகைப்படங்களை இடம் பெறச் செய்துள்ளனர். இந்த விளம் பரங்களின் கீழே ‘வெல்கம் டூ அமித்ஷா’ என்று குறிப்பிட்டும் கிண் டல் செய்துள்ளனர். ‘வாஷிங் பவுடர் நிர்மா’, 1980-களில் மிகவும் புகழ் பெற்ற சலவைத்தூள் விளம்பரம் ஆகும். கடந்த 2022 செப்டம்பரில், தெலுங்கானா மாநிலம், கம்மா ரெட்டி மாவட்டம் பீர்கூர் நகரிலுள்ள ரேசன் கடைக்குச் சென்ற ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரேசன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் வைக்கப்படாதது ஏன்? என்று கேட்டு, அந்த மாவட்ட ஆட்சியரிடம் சண்டை போட்டார். இதையொட்டி, ஆளும் பாரத் ராஷ் டிர சமிதி கட்சியினர், கேஸ் சிலிண் டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி- அதில் சிலிண்டரின் விலை ரூ. 1,115 என எழுதி பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.