பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள வி.வி.பள்ளி நிர்வாகம் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பு மற்றும் தேர்வு நிகழ்வுகளில் கலந்து கொள்ள தடை விதித்தது. இதனை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்எப்ஐ) பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் விளைவாக பள்ளி நிர்வாகம் தடையை எதிர்கொண்ட மாணவர்களுக்கு நடப்பு ஆண்டின் முழு கல்விக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்தது. மேலும் இந்த சம்பவத்திற்காக பள்ளி நிர்வாகம், தங்களது தவறான நடத்தைக்கு மன்னிப்புக் கோரியது.