states

img

ஐரோப்பாவில் அதிகரிக்கும் போர் எதிர்ப்பு அலையும் இடதுசாரி இயக்கங்களின் எழுச்சியும் - பேரா.விஜய் பிரசாத்

உக்ரைன் போர் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையிலும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை ஓராண்டைக் கடந்துள்ள சூழலிலும், ஐரோப்பிய மக்களின் மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தென்படு கின்றன. 2024 பிப்ரவரியில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு இந்த மாற்றங்களை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. 

உக்ரைன் தொடர்பான  மக்கள் கருத்து

உக்ரைன் மக்களுக்கான மனிதாபிமான உதவி களையும், அகதிகளை பாதுகாப்பதையும் பெரும் பான்மை ஐரோப்பியர்கள் தொடர்ந்து ஆதரிக்கின்ற னர். ஆனால் உக்ரைன் ராணுவத்திற்கு வழங்கப் படும் பெரும் நிதியுதவி, போரை நீட்டிப்பதற்கான செலவுகள், அமெரிக்காவின் அழுத்தத்தால் தங்கள் நாடுகளின் ராணுவச் செலவினம் அதிகரிப்பது ஆகியவற்றை ஐரோப்பிய மக்கள் ஏற்கவில்லை.    ஜெர்மனியில் 41% மக்கள் உக்ரைனுக்கான உதவி ‘அதிகப்படியானது’ என கருதுகின்றனர். உக்ரைனுக் கான அமெரிக்க உதவி குறைக்கப்பட்டால், அதை ஐரோப்பிய ஒன்றியத்தால் ஈடுகட்ட முடியும் என்பதில்  80% ஜெர்மானியர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். பிரான்சில் 39% மக்கள் ராணுவ உதவிகள் குறைக் கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

பாலஸ்தீன விவகாரத்தில்  மக்கள் நிலைப்பாடு

இஸ்ரேலுடனான ஆயுத வர்த்தகம் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஐரோப்பா முழுவதும் வலுப்பெற்று வருகிறது. இத்தாலியில் 65%, பெல்ஜியத்தில் 62%, பிரான்சில் 51%, ஜெர்மனியில் 49% மக்கள் இதனை ஆதரிக்கின்றனர். இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்வதாக பெரும்பாலான ஐரோப்பியர்கள் கருது கின்றனர் - இத்தாலியில் 49%, பெல்ஜியத்தில் 43%, ஜெர்மனியில் 33%. 

அரசியல் தலைமையின்  எதிர்மறை நிலைப்பாடு

ஆனால் ஐரோப்பிய அரசியல் தலைமை இன்ன மும் ரஷ்ய எதிர்ப்புக் கொள்கையிலேயே பிடிவாதமாக  உள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. பாலஸ் தீனத்தில் நடக்கும் இனப்படுகொலையை கண்டு கொள்ள மறுக்கிறது.   உதாரணமாக, ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலேனா பியர்பாக், காசாவில் பொதுமக்களை இலக்கு வைத்து கொல்வது இஸ்ரேலுக்கு நியாயமா னது என நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் ஜெர்மனி, லிதுவேனியாவில் 4,800 வீரர்கள், 200 பொதுமக்கள் கொண்ட ராணுவ தளம் அமைக்கிறது. ரஷ்ய நகரங்களை நிமிடங்களில் தாக்கக்கூடிய ஏவு கணைகளும் அங்கு நிறுத்தப்படலாம். 

அமெரிக்காவின் கட்டுப்பாடு

இத்தாலியில் மூன்று பெரிய அமெரிக்க ராணுவ தளங்களும், ஜெர்மனியில் 40க்கும் மேற்பட்ட அமெ ரிக்க ராணுவ தளங்களும் உள்ளன. இவற்றின் காரண மாக சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையை வகுக்க ஐரோப்பிய நாடுகளுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. 2003இல் இராக் மீதான சட்டவிரோத போரை  எதிர்த்தது போன்ற விதிவிலக்குகள் மட்டுமே மிஞ்சி நிற்கின்றன.

இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சி

இந்தச் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஐரோப்பிய இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சியில் தெரிகின்றன. பிரான்சில் புதிய மக்கள் முன்னணி (NFP) 180 இடங்களை பெற்று மிகப்பெரிய அணியாக உருவெடுத்துள்ளது. லா பிரான்ஸ் இன்சூமிஸ், கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் கட்சி ஆகியவை இதில் அடங்கும்.  ஜெர்மனியில் சாரா வேகன்நெக்ட் கூட்டணி (BSW)  என்ற புதிய இடதுசாரி கட்சி உருவாகி, டை லிங்கே  கட்சியில் இருந்து பிரிந்துள்ளது. உக்ரைன் போருக் கும், பாலஸ்தீன இனப்படுகொலைக்கும் எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ள பிஎஸ்டபிள்யு (BSW), அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவா கவும், ஜெர்மன் மண்ணில் அமெரிக்க ஏவுகணைகள் வைப்பதற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது.  பெல்ஜியத்தில் தொழிலாளர் கட்சி (PVDA-PTB) 2018 தேர்தல்களில் இருந்து தனது பிரதிநிதித்து வத்தை இரட்டிப்பாக்கி, 258 உள்ளாட்சி பிரதிநிதி களைப் பெற்றுள்ளது. ஆன்ட்வெர்ப் நகரில் 20% வாக்குகளை பெற்று, பல நகரங்களில் முதல்முறை யாக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.

எதிர்கால சாத்தியங்கள்

பெல்ஜிய தொழிலாளர் கட்சியின் தலைவர் பீட்டர் மெர்டென்ஸ் கூறுவது போல, “தற்போது நாம் குழப்ப காலகட்டத்தில் உள்ளோம். குழப்பம் எப்போ தும் தூசியை கிளப்பும். ஆனால் இடதுசாரிகள் இந்த தூசிக்கு பயப்பட தேவையில்லை. ஆசியா, ஆப்பி ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் காலனியாதிக்க காலத்திலும், நவதாராளமய காலத்திலும் திணிக் கப்பட்ட பேரழிவுகளை பார்க்கும்போது, தற்போ தைய ஒழுங்கு ஏற்கனவே மிகவும் வன்முறையானது என்பது தெளிவாகிறது. இந்த செயல்முறை இப்போது தான் தொடங்கியுள்ளது, மிகவும் கடினமான கட்டத்தில் உள்ளது. இது வலதுசாரி திசையில் செல்ல லாம், ஆனால் அவ்வாறு செல்லாமல் தடுப்பது நமது வேலை. ஐரோப்பாவில் ஸ்திரமான வாழ்க்கை வாழ்வ தாக உணரும் மக்கள் குழப்பத்தில் சிக்கலாம், ஆனால் அந்த குழப்பம் முதலாளித்துவத்தால் ஏற்பட்டது. குழப் பத்திற்கு மாறாக, புதிய வகையான ஸ்திரத்தன்மை யை - சோசலிச ஸ்திரத்தன்மையை நோக்கி முன்னே றும் பாதையை மக்களுக்கு காட்ட வேண்டும்.” இவ்வாறு, போர் எதிர்ப்பு உணர்வும் இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சியும் ஐரோப்பாவில் புதிய அரசியல் மாற்றங்களுக்கான வாய்ப்புகளை உரு வாக்கி வருகின்றன. மக்களின் விருப்பத்திற்கும் அரசி யல் தலைமையின் செயல்பாடுகளுக்கும் இடையி லான இடைவெளி, வாஷிங்டனின் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்ல ஐரோப்பிய நாடுகளுக்கு உள்ள இயலாமை ஆகியவை இந்த மாற்றங்களின் அவசியத்தை மேலும் வலியுறுத்துகின்றன. 

பீப்பிள்ஸ் டெமாக்ரசி (அக்.20)
தமிழில் சுருக்கம் : ராகினி