சென்னை, டிச.22- ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா வுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற் கொலைகள் அதிகரித்து வரும் சூழல் மிகுந்த கவ லையளிக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய சூதாட்ட கலாச்சாரத்தால் தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக, பெண்கள் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுக்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய பொறுப்பு தமிழக ஆளுநருக்கு இருக்கிறது. ஆனால் அரசின் சார்பாக தடை கோரிய மசோ தாவை அனுப்பி வைத்தும், தமிழக ஆளுநர் இது வரை அதில் கையெழுத்திடாமல் இருப்பது இத்த கைய ஆன்லைன் கொலைகளுக்கும் , கொள் ளைகளுக்கும் ஆதரவு அளிப்பதற்கு சமமாகும். அவசரச் சட்டம் காலாவதி ஆகிவிட்டதால் ஆன் லைன் சூதாட்டங்கள் முழு வீச்சில் தொடங்கி விட்டன. அதற்கான விளம்பரங்களும் எவ்வித தங்கு தடையும் இன்றி ஒளிபரப்பப்பட்டு வரு கின்றன. சூதாட்டத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப் பட்டு நிர்க்கதியாக்கப்பட்டுள்ளன. இப் பிரச்ச னையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக தமிழக ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.