states

மேட்டூர் அணை : நீர்வரத்து சரிவு!

சேலம், ஜுன் 11 - நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. வியாழனன்று காலை 9,772 கன அடியாக இருந்த நீர்வரத்து வெள்ளியன்று காலை 7,605 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டமும் வியாழனன்று 115.22 அடியாக இருந்தது, வெள்ளியன்று 114.95 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.