states

விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22 தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22இல் ஆர்ப்பாட்டம் நடத்திட  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முடிவு வருமாறு:

தடையின்றி மின் இணைப்பு வழங்கிடுக!

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான  அடிமனைகளில் பல லட்சக்கணக்கான பயனாளிகள் வீடு கள் கட்டி குடியிருந்து வருகின்றனர். பல தலைமுறை களாக வாழ்ந்து வரும் பயனாளிகள் புதிய மின் இணைப்புக்கு மின்வாரியத்தை அணுகும் போது அறநிலை யத் துறையின் தடையில்லாச் சான்று பெற்று வருமாறு பயனாளிகளை அலைக்கழித்து வருகின்றனர். அறநிலை யத்துறை செயல் அலுவலர் குழு அடிமனை வாடகைக்கு வசூல் செய்யும் நோக்கில் தடை இல்லா சான்று வழங்கு வதை தவிர்த்து, பயனாளிகளை அலைய வைக்கின்றனர். மேலும் மின் இணைப்பை கோயில்கள் பெயரில் தான் பெற  வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மின் இணைப்பு என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும் 2003 மின் வாரிய சட்டத்தின் படியும் மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். மேலும் பயனாளிகள் மின் இணைப்பு கோருவது அடிமனைகளுக்கு அல்ல. பயனாளிகளால் கட்டப்பட்ட மேல் கட்டுமானங்களுக்கு ஆகும். மின் இணைப்பு கோருபவர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் அளித்த இருப்பிடச் சான்று அடிப்படையில் மின் இணைப்பை  மின்வாரியம் எவ்வித தாமதமும் இல்லாமல் வழங்க வேண்டும்.  

மும்முனை மின்சாரம் 14 மணி நேரம் வழங்கிடுக!

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு காவிரியில் நீர் திறப்பு இல்லாத நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் லட்சக்கணக்கான ஏக்கர்  சாகு படி நடைபெற்று வருகிறது. குறுவைத் தொகுப்பு திட்டத்தை யும் மாநில அரசு அறிவித்துள்ளது. குறுவைப் பயிர்களை  காப்பாற்ற அரசு அறிவித்த நேரங்களில் கூட மும்முனை  மின்சாரம் கிடைப்பதில்லை. பயிர்கள் காய்ந்து வரும் சூழல் சில பகுதிகளில் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, தொடர்ச்சி யாக காவிரி டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் 14 மணி நேரம் கிடைப்பதை அரசு உறுதி செய்திடவேண்டும்.

ஜூலை 22 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மலைகள் மற்றும் வன ஓரங்களில் பட்டா மற்றும் அரசின் புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த நிலங்களில் காட்டுப்பன்றி, மயில், யானை, குரங்கு,  காட்டெருமைகள் போன்றவைகளால் பயிர் சேதம் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. ஒரு சில  பகுதிகளில் மனித உயிர் சேதமும், பொருட்கள், வீடு உடை மைகள் சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. வன விலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022-இல் இந்திய அர சாங்கம் கொண்டு வந்து ,அது 2023 ஏப்ரலில் தான் நாடாளு மன்றத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ளது, வன எல்லைகள் குறித்தோ அல்லது வன உயிரின சரணாலயங்கள் குறித்தோ  மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றிக் கொள்ளவும் வழிவகை செய்கிறது. அதேபோல் பயிர் நஷ்டம், உயிர் சேதம் மற்றும் இது  போன்ற வனவிலங்குகளால் ஏற்படும் இழப்பிற்கு மாநில அரசு உரிய இழப்பீட்டை  தீர்மானித்துக் கொள்ளலாம் என்பதை கேரளா போன்ற மாநில அரசுகள் நடைமுறைப் படுத்தி வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் வன ஓரமாக வேளாண் பணிகளில் ஈடுபடும் விவசாயிகளின் நெல், வாழை, தென்னை, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு தற்பொழுது வழங்கிடும் இழப்பீடு போதுமானதல்ல. உரம், மருந்து இதர செலவினங்கள் குறித்து ஆய்வு செய்து  முழு செலவையும் ஈடு செய்யும் வகையில் தரவேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர் சேதத்தினை ஏற்படுத்திடும் காட்டுப் பன்றியை கேரள மாநிலத்தில் கட்டுப்படுத்திட வாய் வெடி மருந்து வைத்து வனத்துறை யினர், விவசாயிகள் மேற்கொள்வது போல் தமிழ்நாட்டிலும் காட்டுப்பன்றிகள் மூலம் பயிர்சேதம் ஏற்படாத வகையில் தடுத்திட தமிழ்நாடு அரசு  உரிய ஆணையை பிறப்பிக்க வேண்டும். வன ஓரங்களில் வனவிலங்குகள் விவசாயிகளை பயிர் நிலங்களில் சேதப்படுத்திடாத வகையில் உரிய தடுப்பு  ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.  இதற்காக மாநில அரசு, வேளாண்மை துறையுடன் இணைந்து வருவாய் துறையும் செயல்படுத்திடும் வகையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.  மேற்கண்ட கோரிக்கைகளையும் யானை வழித்தட விரிவாக்கத்தை திரும்பப் பெற வேண்டுமென்று வலி யுறுத்தியும் ஜூலை 22ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று விவசாயிகள் சங்க மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.

 

;