states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. பிரபல கணினி உற்பத்தி நிறுவனமான டெல் (DELL) நிறுவனம் 5% ஊழியர்களை, அதாவது 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள் ளது. உலகளவில் கணினி உற்பத்தி குறைவதால் ஊழியர்களை நீக்கியதாக தெரிவித்துள்ளது.
  2. ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் போராட்டங்களுக்கு ஆதரவாக பாடியதற்காக சிறைவாசம் அனு பவிக்கும் ஈரானிய பாடகர் ஷெர்வின் ஹாஜி பூருக்கு இசை உலகின் முதன்மையான விரு தான “கிராமி” வழங்கப் பட்டுள்ளது.
  3. சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரைச் சேர்ந்த பாஜக தலைவர் நீலகந்த்  கக்கேம், பைக்ராம் பகுதி யில் மாவோயிஸ்டு களால் கொல்லப்பட்டார்.
  4. தெலுங்கானா மாநி லத்தில் நடப்பு நிதி யாண்டிற்காக ரூ.2.90 லட்சம் கோடிக்கான வரி யில்லா பட்ஜெட்டை அம்மாநில சட்டப் பேர வையில் திங்களன்று தாக்கல் செய்தார் நிதி யமைச்சர் ஹரிஷ் ராவ்.
  5. தில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் 3-வது முறை யாக ரத்து செய்யப்பட்ட தை அடுத்து உச்சநீதி மன்றத்தை நாடப்போவ தாக ஆம் ஆத்மி தலைவர் அதிஷி தெரிவித்துள் ளார்.
  6. சென்னையில் தாழ்தள சொகுசு பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும் என தமிழ் நாடு போக்குவரத்துத் துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
  7. கடந்த ஜனவரியில் 14% வாகனம் விற்பனை  ஆகி யுள்ளது. அதாவது 14.25 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு ஜனவரி யில் 16 லட்சம் வாக னங்கள் விற்பனையா னது என்பது குறிப்பிடத் தக்கது.
  8. இந்தியாவின் எண்ணெய் தேவையை சந்தை விலையிலேயே பூர்த்தி செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய எண்ணெய் நிறு வனமான ரோஸ் நேபிட் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
  9. இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக 150 சாலை கள் மூடப்பட்டன. இத னால் இயல்பு வாழ்க்கை  முற்றிலும் பாதிக்கப் பட்டது. 
  10. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டில் 22% ஈரப்பதம் உள்ள நெல் பயிர்களை கொள்முதல் செய்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி யிருந்த நிலையில், ஒன்றிய அரசு குழுவை அனுப்பியது. 
  11. போதைப்பொருள் வர்த்தக சேனலான  எக்ஸ்க்லு (Exclu) எனப் படும் மறைகுறியாக்கப் பட்ட தகவல்தொடர்பு சேவையுடன் தொடர் புடைய 48 பேரை ஐரோப் பிய புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளனர்.
;